செய்திகள் :

இரு பேருந்துகளுக்கு இடையே சிக்கிய இளைஞர்: மிரள வைக்கும் விடியோ!

post image

அரசுப் பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால், இரண்டு பேருந்துகளுக்கு இடையே சிக்கிய இளைஞர் கண் இமைக்கும் நேரத்தில் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய மிரள வைக்கும் விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள தாமரங்கோட்டை பகுதியில் இருந்து பட்டுக்கோட்டையை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதற்குப் பின்னால் அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இரண்டு பேருந்துகளும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்த போது, தாமரங்கோட்டை அருகே இளைஞர் ஒருவர் தனியார் பேருந்தில் ஏறுவதற்காக கையை காட்டி சாலையைக் கடக்கச் சென்றுள்ளார்.

அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் தவறான முறையில் தனியார் பேருந்தை முந்த முயன்றுள்ளார்.

இதையும் படிக்க |அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

இதில் தனியார் பேருந்தில் ஏற முயன்ற இளைஞர் பரத் இரண்டு பேருந்துகளுக்கு இடையே சிக்கிக் கொண்டவர் நல்வாய்ப்பாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

தனியார் பேருந்துக்கு பின்னால் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் வேகமாக வந்து முந்த முயன்றதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இரு பேருந்துகளுக்கும் இடையே சிக்கி நூலிழையில் உயிர் தப்பும் விபத்து பதிவான பதைபதைப்பூட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைராலாகி, காண்போரை மிரள வைக்கிறது.

திமுகவை வீழ்த்த ஒரே அணியில் திரள வேண்டும்: டிடிவி தினகரன்

திமுகவை வீழ்த்துவதற்கு அனைவரும் ஒரே அணியில் திரள வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.அனைத்து சட்டமன்றத் தொகுதி அ.ம.மு.க. நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் ... மேலும் பார்க்க

தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ரூ.2 கோடியில் ஆய்வு இருக்கை!

சிந்துவெளி குறித்து தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க ரூ.2 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழக அரசின... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: இந்த வாரமும் 2 பேர் வெளியேற்றம்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் 2 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் டிக்கெட் டூ ... மேலும் பார்க்க

சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு பன்னாட்டுக் கருத்தரங்கம்: முதல்வர் தொடக்கி வைத்தார்.

தமிழக அரசின் தொல்லியியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கை முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன.5) தொடக்கி வைத்தார்.சென்னை எழும்பூர் அருங்காட்சி... மேலும் பார்க்க

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: உரிமையாளர் கைது!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நேற்று(ஜன. 4) நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியான நிலையில், ஆலையின் உரிமையாளர் சசிபாலனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.விருதுநகா் அருகேயுள்ள வீராா்ப... மேலும் பார்க்க

மியான்மரில் 60 கிலோ போதைப் பொருள் பறிமுதல்!

மியான்மரில் சுமார் 60 கிலோ அளவிலான மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று (ஜன.4) தெரிவித்துள்ளனர்.கிழக்கு மியான்மரின் ஷன் மாநிலத்தில் போதைப் பொருள் த... மேலும் பார்க்க