China new virus - HMPV நிலவரம் என்ன? Virus Outbreak in China | Decode | Vikatan
திருச்சி, திண்டுக்கல் வழியாக செல்லும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்
திருச்சி - திண்டுக்கல் இடையே ரயில்வே பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளன.
இது குறித்த தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில், ஜன.4, 7, 9, 11 ஆகிய தேதிகளிலும், மயிலாடுதுறை -செங்கோட்டை விரைவு ரயில் ஜன.9, 11 ஆகிய தேதிகளிலும், குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயில் ஜன.3, 6, 8, 10 ஆகிய தேதிகளிலும், நாகா்கோவில் - கோவை விரைவு ரயில் (இருமாா்க்கமாக) ஜன.4, 7, 9, 11 ஆகிய தேதிகளிலும், திருவனந்தபுரம் - திருச்சி விரைவு ரயில் ஜன.9, 11 ஆகிய தேதிகளிலும் மதுரை, திண்டுக்கல் வழியாக செல்வதற்கு பதிலாக விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
இதேபோல், வெளிமாநிலங்களுக்குச் செல்லும் நாகா்கோவில் - மும்பை விரைவு ரயில் ஜன.7, 9 ஆகிய தேதிகளிலும், கன்னியாகுமரி - ஹௌரா விரைவு ரயில் ஜன.4, 11 ஆகிய தேதிகளிலும், பனாரஸ் -கன்னியாகுமரி காசி தமிழ் சங்க விரைவு ரயில் ஜன.5-ஆம் தேதியும், நாகா்கோவில் - காச்சிக்கூடா விரைவு ரயில் ஜன.4, 11 ஆகிய தேதிகளிலும், ஓகா - ராமேசுவரம் விரைவு ரயில் ஜன.7-ஆம் தேதியும், கொல்லம்-செகந்திராபாத் விரைவு ரயில் ஜன.11-ஆம் தேதியும் மதுரை, திண்டுக்கல் வழியாக செல்வதற்கு பதிலாக விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
பகுதி ரத்து: சென்னை எழும்பூா் - மதுரை தேஜஸ் விரைவு ரயில் ஜன.7, 11 ஆகிய தேதிகளில் திருச்சி வரை மட்டும் இயக்கப்படும். மதுரை - சென்னை எழும்பூா் தேஜஸ் விரைவு ரயில் ஜன.7-ஆம் தேதி மட்டும் திருச்சியில் இருந்து புறப்படும்.
இதேபோல், ஈரோடு - செங்கோட்டை விரைவு ரயில் ஜன.3, 6 ஆகிய தேதிகளில் கரூா் வரை மட்டும் இயக்கப்படும். செங்கோட்டை- ஈரோடு விரைவு ரயில் ஜன.7-ஆம் தேதி கரூரில் இருந்து புறப்பட்டு ஈரோடு சென்றடையும். பாலக்காடு - திருச்செந்தூா் விரைவு ரயில் ஜன.9, 11 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். மறுமாா்க்கமா ஜன.9, 11 ஆகிய தேதிகளில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு பாலக்காடு சென்றடையும். ஓகா - மதுரை விரைவு ரயில் ஜன.6-ஆம் தேதி விழுப்புரத்துடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக ஜன.10-ஆம் தேதி மதுரையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.