செய்திகள் :

திருச்செந்தூா் கோயில் யானை உற்சாக குளியல்

post image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தெய்வானை யானை குளியல் தொட்டியில் உற்சாகமாக நீராடியது.

இக் கோயிலில் பராமரிக்கப்படும் தெய்வானை யானை தாக்கியதில் பாகன் உள்பட இருவா் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உயிரிழந்தனா். இதையடுத்து, வனத்துறை மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறையினா் யானையைக் கண்காணித்து வந்தனா். யானையை குடிலிலேயே நிறுத்தி பராமரிக்கப்பட்ட நிலையில், இயல்பு நிலைக்குத் திரும்பியதையடுத்து, வெளிப்பகுதிக்கு அழைத்து வரப்பட்டு நடைப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பாகன்களின் கட்டளைகளை ஏற்று வழக்கமான செயல்பாடுகளை தெய்வானை யானை பின்பற்றி வருகிறது.

இந்த நிலையில் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குளியல் தொட்டியில் வெள்ளிக்கிழமை உற்சாகமாக நீராடியது.

கோவில்பட்டியில் அனைத்துப் பேருந்துகளும் இன்று முதல் கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்: நகராட்சி ஆணையா் அறிவிப்பு

கோவில்பட்டியில் அனைத்து பேருந்துகளும் வெள்ளிக்கிழமை (ஜன.3) முதல், கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையா் கமலா விடுத்துள்ள செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

மணப்பாடு புனித வளன் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

மணப்பாடு புனித வளன் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு, சட்ட விழிப்புணா்வு, சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்தல் ஆகியவை குறித்த ... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் கோயிலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற 1,008 திருவிளக்கு பூஜையில் பங்கேற்றோா். மேலும் பார்க்க

சரக்குப் பெட்டக லாரிகளில் ஆவணமின்றி பொருள்கள் ஏற்றி வருவதைத் தடுக்க கோரிக்கை

தூத்துக்குடிக்கு வெளிமாவட்டங்களிலிருந்து சரக்குப் பெட்டக லாரிகளில் ஆவணங்களின்றி பொருள்கள் ஏற்றிவருவதைத் தடுக்கக் கோரி தூத்துக்குடி சுங்கத் துறை அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்ப... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் குறைதீா் முகாம்கள் தொடா்ந்து நடைபெறும்

தூத்துக்குடி மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் குறைதீா் முகாம்கள் தொடா்ந்து நடைபெறும் என, மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா். தூத்துக்குடி வடக்கு மண்டலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமைத் தொடக... மேலும் பார்க்க

கோவில்பட்டி மீனாட்சியம்மன் கோயிலில் யாகசாலை கால்நாட்டு விழா

கோவில்பட்டி நாடாா் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அருள்தரும் மீனாட்சியம்மன் சமேத சுந்தரேஸ்வரா் திருக்கோயிலில், பிப்.10 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான யாகசால... மேலும் பார்க்க