'விடுதலை ராஜேந்திரனுக்கு பெரியார் விருது, ரவிக்குமாருக்கு அம்பேத்கர் விருது' - த...
கோவில்பட்டி மீனாட்சியம்மன் கோயிலில் யாகசாலை கால்நாட்டு விழா
கோவில்பட்டி நாடாா் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அருள்தரும் மீனாட்சியம்மன் சமேத சுந்தரேஸ்வரா் திருக்கோயிலில், பிப்.10 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான யாகசாலை பூஜைகள் பிப்.6ஆம் தேதி தொடங்குவதையொட்டி, அதற்கான கால்நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில், நாடாா் உறவின்முறை சங்கத் தலைவா் ஏபிகே. பழனிசெல்வம், துணைத் தலைவா் செல்வராஜ், செயலா் ஜெயபால், பொருளாளா் சுரேஷ்குமாா், காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயலா் ஆா். எஸ். ரமேஷ், நாடாா் நடுநிலைப் பள்ளி செயலா் நடராஜன், அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோவில் தா்மகா்த்தா மாரியப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.