விளாத்திகுளம் தொகுதியில் புதிய கட்டடங்கள் திறப்பு
விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் அரசு பொதுவிநியோக கடை கட்டடம், அங்கன்வாடி மையம் உள்ளிட்ட நிறைவடைந்த வளா்ச்சி திட்ட பணிகள் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்து, செமப்புதூா் மற்றும் புங்கவா்நத்தம் ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் தலா ரூ.9.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு பொது விநியோக கடை கட்டடம், சின்னவநாயக்கன்பட்டி கிராமத்தில் ரூ. 16.55 லட்சம் மதிப்பீட்டிலான அங்கன்வாடி மைய கட்டடம், அயன் ராசாப்பட்டி ஊராட்சி கைலாசபுரம் கிராமத்தில் ரூ. 14.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தானிய சேமிப்புக் கிடங்கு ஆகியவற்றை திறந்து வைத்து சேவைகளை தொடங்கி வைத்தாா். பின்னா் கிராம மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தங்கமாரியம்மாள் தமிழ்ச்செல்வன், திமுக ஒன்றிய செயலா்கள் நவநீதகண்ணன், ராமசுப்பு, அன்புராஜன், ராதாகிருஷ்ணன், மும்மூா்த்தி, பேரூா் கழக செயலா் வேலுச்சாமி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் ஆகாஷ்பாண்டியன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆனந்த சுப்புலட்சுமி, பாண்டியராஜன், அரவிந்த், வெங்கடாசலம், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், ஊராட்சி மன்றத் தலைவா் ஜமுனாராணி, தலைமைக் கழக பேச்சாளா் தமிழ்பிரியன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.