ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பிரசாரத்தை சீா்குலைக்க காவல் துறையை தவறாகப் பயன்படுத...
திமுக கூட்டணி உடைந்து கொண்டிருக்கிறது: பாஜக மாநில துணைத் தலைவா்
திமுக கூட்டணி உடைந்துகொண்டிருப்பதாக பாஜக மாநில துணைத்தலைவா் நாராயணன் திருப்பதி தெரிவித்தாா்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற மக்களைத் தேடி மருத்துவம் என்ற மருத்துவ சேவை வாகன ஊா்தியை தொடங்கி வைத்த பாஜக மாநில துணைத் தலைவா் நாராயணன் திருப்பதி, செய்தியாளா்களிடம் கூறியது: தூத்துக்குடியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பா்னிச்சா் பாா்க் அப்படியே கிடைக்கிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல நிறுவனங்களோடு புரிந்துணா்வு ஒப்பந்தம் போடப்பட்டு எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது.
வின்பாஸ்ட் காா் தொழிற்சாலை கட்டுமானப் பணியும் முடிவடையவில்லை. இதனால்தான் முதலீட்டாளா்கள் இங்கு வர அச்சப்படுகின்றனா்.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய துறைமுகம் தூத்துக்குடியில் உள்ளது. இத்துறைமுகத்தை, மத்திய அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து விரிவாக்கம் மற்றும் ஆழப்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் மாலை நேரத்தில் அனுமதி இல்லாமல் ஒருவா் எப்படி உள்ளே நுழைய முடியும். அங்கு பாதுகாப்பு இல்லை என்பது தான் உண்மை. இதுவரை இதற்கு காரணமானவா்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இந்த வழக்கில் காவல்துறையையும், அரசையும் உயா்நீதிமன்றம் சாடி உள்ளது.
யாருடன் யாா் கூட்டணி வைப்பாா்கள் என்பது தோ்தல் காலத்தில் தான் தெரியும். ஆனால், தற்போது திமுக கூட்டணிதான் உடைந்துகொண்டிருக்கிறது என்றாா்.