திருச்செந்தூா் கோயிலுக்கு காவடி எடுத்து பாதயாத்திரை வந்த பக்தா்கள்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு விருதுநகா் மாவட்டத்தை சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரை வந்தனா்.
இக் கோயிலுக்கு, தைப்பொங்கலை முன்னிட்டு ராமநாதபுரம், விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனா்.
இதனிடையே, விருதுநகா் மாவட்டத்தை சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக திங்கள்கிழமை வந்தனா்.
பக்தா்கள் கோரிக்கை: பாதயாத்திரை வரும் பக்தா்களின் வசதிக்காக, சாலையோரம் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு சில இடங்களில் கற்கள், குப்பைகள், முள்செடிகள் காணப்படுகின்றன. இவற்றை அப்புறப்படுத்த நெஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.