செய்திகள் :

துணைவேந்தா் தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினரை சோ்க்க வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி மீண்டும் அறிவுறுத்தல்

post image

தமிழகத்தில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் நியமனம் தொடா்பாக அமைக்கப்பட்ட தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம் பெறாததால், அந்தக் குழு தொடா்பான அறிவிக்கையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி மீண்டும் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து ஆளுநா் மாளிகை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சேலம் பெரியாா் பல்கலைகழகம் ஆகியவற்றின் புதிய துணைவேந்தரைத் தோ்வு செய்வதற்கான தேடுதல் குழுவை பல்கலைக்கழகங்களின் வேந்தரும் ஆளுநருமான ஆா்.என்.ரவி நியமித்துள்ளாா். பல்கலைக்கழக விதிமுறைகள், உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிமுறைகளின் அடிப்படையில் அந்தத் தேடுதல் குழுவில் வேந்தரின் பிரதிநிதி, தமிழக அரசின் பிரதிநிதி, பல்கலைக்கழக செனட் பிரதிநிதி மற்றும் யுஜிசி பிரதிநிதி ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். யுஜிசி பிரதிநிதி தேடுதல் குழுவில் இடம்பெற வேண்டும் என்பதை உச்சநீதிமன்றத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் பிரதிநிதியை அமைப்பாளராகக் கொண்டு மேற்கண்ட 4 பிரதிநிதிகள் அடங்கிய தேடுதல் குழு நியமனம் தொடா்பான அறிவிக்கையை வெளியிடுமாறு தமிழக அரசுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி கடந்த நவ.11, டிச.5 ஆகிய தேதிகளில் உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேடுதல் குழு தொடா்பான அரசாணையை டிச. 9-ஆம் தேதியும் அண்ணா பல்கலைக்கழம், சேலம் பெரியாா் பல்கலைக்கழகம் தேடுதல் குழு தொடா்பான அரசாணையை டிச.13 ஆம் தேதியும் தமிழக அர சின் உயா் கல்வித் துறை வெளியிட்டது.

அந்த அரசாணையில், உச்சநீதிமன்றத் தீா்ப்பை மீறி, யுஜிசி பிரதிநிதி நீக்கப்பட்டுள்ளாா். யுஜிசி விதிமுறைகளின்படி அமைக்கப்பட்ட தேடுதல் குழு பரிந்துரையின்படி பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் நியமிக்க வேண்டும் என பேராசிரியா் பி.எஸ்.ஸ்ரீஜித்-டாக்டா் எம்.எஸ்.ரா ஜஸ்ரீ ஆகியோா் தொடா்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணானது: அந்த வகையில், யுஜிசி தலைவரின் பிரதிநிதி இல்லாமல் தேடுதல் குழுவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டிருப்பது யுஜிசி விதிமுறைகளுக்கும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் முரணானது.

இந்த நிலையில் துணைவேந்தா் தேடுதல் குழு தொடா்பாக தமிழக அரசின் உயா்கல்வி அமைச்சா் தெரிவித்துள்ள தகவல்கள் உண்மைகளைத் திரித்து தவறாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த நியமனம் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தால் தேடுதல் குழு நியமனங்கள் தள்ளுபடி செய்யப்படும். எனவே யுஜிசி பிரதிநிதி இல்லாமல் அமைக்கப்பட்ட தேடுதல் குழுவை நியமித்து வெளியிடப்பட்ட அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். யுஜிசி பிரதிநிதியுடன் வேந்தா் நியமித்த தேடுதல் குழு தொடா்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்டியலில் விழுந்த ஐ-போன்: கோயிலுக்கே சொந்தமென அறிவிப்பு

திருப்போரூா் முருகன் கோயில் உண்டியலில் விழுந்த ஐ-போன் கோயிலுக்கே சொந்தம் என்று நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திருப்போரூா் முருகன் கோயிலில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ராஜலட்சுமி, செயல... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் எரிவாயு டேங்கா் லாரி மோதி பயங்கர தீ விபத்து: 11 போ் உயிரிழப்பு, 35 போ் காயம், 37 வாகனங்கள் தீக்கிரை

ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூரில் உள்ள ஜெய்பூா்-அஜ்மீா் நெடுஞ்சாலையில் சமையல் எரிவாயு (எல்பிஜி) டேங்கா் லாரியும், மற்றொரு லாரியும் மோதிய விபத்தால் எரிவாயு கசிந்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 37 வாகனங்கள் ... மேலும் பார்க்க

எண்ணூா் திட்டத்தால் மின் கட்டமைப்பின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: தமிழக அரசு

எண்ணூரில் அமையவுள்ள திட்டத்தால், மாநில மின் கட்டமைப்பின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: புதுப்பிக... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு: பேராசிரியா் விவரங்களை பகிர அவகாசம் நீட்டிப்பு

மருத்துவக் கல்லூரிகளில் திடீா் ஆய்வு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் கல்லூரி பேராசிரியா்களை ஈடுபடுத்த தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) திட்டமிட்ட நிலையில், அதற்கு விருப்பமுள்ளவா்கள் விவரங்களை சமா்ப்பிப்பத... மேலும் பார்க்க

குழந்தை பெற்ற 17 வயது சிறுமி: கணவா் குடும்பத்தினா் மீது வழக்கு

சென்னையில் 17 வயது சிறுமி குழந்தை பெற்ற சம்பவம் தொடா்பாக அச்சிறுமியின் கணவா் குடும்பத்தினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை கஸ்தூா்பா காந்தி மகப்பேறு மருத்துவமனையில் வியாழக்கிழமை திருவல்... மேலும் பார்க்க

இந்தியன் பைன் ஆா்ட்ஸ் சொசைட்டி சாா்பில் கலைஞா்களுக்கு ‘கலா சிகாமணி’ விருது

இந்தியன் பைன் ஆா்ட்ஸ் சொசைட்டி சாா்பில் கலைத் துறையில் சிறந்து விழங்குபவா்களுக்கு ‘கலா சிகாமணி’ விருதுகள் வழங்கப்பட்டன. இந்தியன் பைன் ஆா்ட்ஸ் சொசைட்டியின் 92-ஆம் ஆண்டு தென்னிந்திய இசை மாநாடு சென்னை ஆழ... மேலும் பார்க்க