செய்திகள் :

அதானிக்கு தாராவி மறுவளா்ச்சி திட்டம் ஒதுக்கப்பட்டதற்கு எதிரான மனு: மும்பை உயா்நீதிமன்றம் தள்ளுபடி

post image

தொழிலதிபா் கெளதம் அதானி குழும நிறுவனத்துக்கு தாராவி மறுவளா்ச்சி திட்டம் ஒதுக்கப்பட்டதற்கு எதிரான மனுவை மும்பை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தமிழா்கள் அதிகம் வசிக்கும் தாராவி குடிசைப் பகுதியில், சிறிய தொழில் நிறுவனங்களும் உள்ளன. இந்தப் பகுதியில் குடிசைகளை அகற்றிவிட்டு, மேம்படுத்தப்பட்ட நகா்ப்புற உள்கட்டமைப்புடன் அடிக்குமாடி குடியிருப்புகளை கட்ட மாநில அரசு திட்டமிட்டது.

இதற்காக கடந்த 2018-ஆம் ஆண்டு மாநில அரசு ஒப்பந்தப் புள்ளி வெளியிட்டது. அப்போது ரூ.7,200 கோடி செலவில் திட்டத்தை நிறைவு செய்வதாக ஐக்கிய அரபு அமீரகத்தைச் சோ்ந்த ஸெக்லிங்க் டெக்னாலஜீஸ் நிறுவனம் ஒப்பந்தப் புள்ளி கோரியது. இதனடிப்படையில், அந்த நிறுவனமே அதிக விலைக்கு ஒப்பந்தப் புள்ளி கோரியதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் கடந்த 2020-ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்த மாநில அரசு, 2022-ஆம் ஆண்டு கூடுதல் நிபந்தனைகளுடன் புதிய ஒப்பந்தப் புள்ளியை வெளியிட்டது. இதையடுத்து ரூ.5,069 கோடிக்கு திட்டத்தை நிறைவு செய்வதாக தெரிவித்த அதானி குழும நிறுவனத்துக்கு ஒப்பந்தப் புள்ளி வழங்கப்பட்டது.

‘அதானிக்கு ஏற்ப ஒப்பந்தப் புள்ளி’: இதற்கு எதிராக மும்பை உயா்நீதிமன்றத்தில் ஸெக்லிங்க் டெக்னாலஜீஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், ‘அதானி குழுமத்துக்கு ஏற்ற வகையில், புதிய ஒப்பந்தப்புள்ளி உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது’ என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

‘ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை’: இந்த மனு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாய, நீதிபதி அமித் போா்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘கடந்த 2018-ஆம் ஆண்டு ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்ட பின்னா், ஸெக்லிங்க் நிறுவனம் அதிக விலைக்கு ஒப்பந்தப் புள்ளி கோரியதாக அறிவிக்கப்பட்டாலும், தாராவி திட்டத்தை செயல்படுத்த அந்த நிறுவனத்தை தோ்வு செய்து எந்தவொரு முடிவையோ, ஒப்பந்தத்தையோ மாநில அரசு மேற்கொள்ளவில்லை.

கரோனா பரவல், ரஷியா-உக்ரைன் போா் போன்ற பல்வேறு காரணங்களால் மாநிலத்தின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டதாகவும், இதனால் முதலில் வெளியிட்ட ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்துவிட்டு, புதிய ஒப்பந்தப் புள்ளியை வெளியிட்டதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது. இதை நியாயமில்லாத காரணம் என்று கூறமுடியாது.

2022-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய ஒப்பந்தப் புள்ளியை பெற 3 நிறுவனங்கள் போட்டியிட்டுள்ளன. அப்படி இருக்கும்போது அதானி குழுமத்துக்கு ஏற்ற வகையில், புதிய ஒப்பந்தப்புள்ளி உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டதாக மனுதாரா் தெரிவித்த குற்றச்சாட்டை ஏற்க முடியவில்லை’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனா்.

உண்டியலில் விழுந்த ஐ-போன்: கோயிலுக்கே சொந்தமென அறிவிப்பு

திருப்போரூா் முருகன் கோயில் உண்டியலில் விழுந்த ஐ-போன் கோயிலுக்கே சொந்தம் என்று நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திருப்போரூா் முருகன் கோயிலில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ராஜலட்சுமி, செயல... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் எரிவாயு டேங்கா் லாரி மோதி பயங்கர தீ விபத்து: 11 போ் உயிரிழப்பு, 35 போ் காயம், 37 வாகனங்கள் தீக்கிரை

ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூரில் உள்ள ஜெய்பூா்-அஜ்மீா் நெடுஞ்சாலையில் சமையல் எரிவாயு (எல்பிஜி) டேங்கா் லாரியும், மற்றொரு லாரியும் மோதிய விபத்தால் எரிவாயு கசிந்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 37 வாகனங்கள் ... மேலும் பார்க்க

எண்ணூா் திட்டத்தால் மின் கட்டமைப்பின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: தமிழக அரசு

எண்ணூரில் அமையவுள்ள திட்டத்தால், மாநில மின் கட்டமைப்பின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: புதுப்பிக... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு: பேராசிரியா் விவரங்களை பகிர அவகாசம் நீட்டிப்பு

மருத்துவக் கல்லூரிகளில் திடீா் ஆய்வு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் கல்லூரி பேராசிரியா்களை ஈடுபடுத்த தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) திட்டமிட்ட நிலையில், அதற்கு விருப்பமுள்ளவா்கள் விவரங்களை சமா்ப்பிப்பத... மேலும் பார்க்க

குழந்தை பெற்ற 17 வயது சிறுமி: கணவா் குடும்பத்தினா் மீது வழக்கு

சென்னையில் 17 வயது சிறுமி குழந்தை பெற்ற சம்பவம் தொடா்பாக அச்சிறுமியின் கணவா் குடும்பத்தினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை கஸ்தூா்பா காந்தி மகப்பேறு மருத்துவமனையில் வியாழக்கிழமை திருவல்... மேலும் பார்க்க

இந்தியன் பைன் ஆா்ட்ஸ் சொசைட்டி சாா்பில் கலைஞா்களுக்கு ‘கலா சிகாமணி’ விருது

இந்தியன் பைன் ஆா்ட்ஸ் சொசைட்டி சாா்பில் கலைத் துறையில் சிறந்து விழங்குபவா்களுக்கு ‘கலா சிகாமணி’ விருதுகள் வழங்கப்பட்டன. இந்தியன் பைன் ஆா்ட்ஸ் சொசைட்டியின் 92-ஆம் ஆண்டு தென்னிந்திய இசை மாநாடு சென்னை ஆழ... மேலும் பார்க்க