துல்கர் சல்மான் படத்தில் இணைந்த எஸ். ஜே. சூர்யா!
நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் மலையாளப் படத்தில் எஸ். ஜே. சூர்யா இணைந்துள்ளார்.
இயக்குநர் மற்றும் நடிகருமான எஸ். ஜே. சூர்யா தன் தனித்துவமான நடிப்பால் இந்தியளவில் கவனம் பெற்றுள்ளார். கதாநாயகனுக்கு இணையான காட்சிகள் உள்ள திரைப்படங்களையே அதிகம் தேர்ந்தெடுக்கிறார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர், விக்னேஷ் சிவனின் எல்ஐகே, வீர தீர சூரன் படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இதையும் படிக்க: வன்முறைதான் தீர்வா? விடுதலை - 2 திரை விமர்சனம்!
இந்த நிலையில், தற்போது மலையாளத்தில் வெளியாகி வெற்றிப்படமான ஆர்டிஎக்ஸ் திரைப்படத்தை இயக்கிய நிகாஸ் ஹிதாயத் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதில், நாயகனாக நடிகர் துல்கர் சல்மானும் நாயகியாக பிரியங்கா மோகனும் நடிக்கின்றனர். ஆக்சன் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் எஸ். ஜே. சூர்யா வில்லனாக நடிக்கிறார்.
ஏற்கனவே, ஃபஹத் ஃபாசில் நடிக்கும் மலையாளப் படமொன்றிலும் எஸ். ஜே. சூர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.