செய்திகள் :

Mumbai: காங்கிரஸ் அலுவலகத்தை சூறையாடிய பாஜக தொண்டர்கள்; தடியடி நடத்தி விரட்டியடிப்பு -என்ன நடந்தது?

post image

மத்திய அமைச்சர் அமித் ஷா பாபாசாஹேப் அம்பேத்கருக்கு எதிராக பேசியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் பாராளுமன்றத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்காக ராகுல் காந்தி மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவத்தால் மும்பையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெளியில் பா.ஜ.க இளைஞரணி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் இளைஞரணித்தலைவர் தேஜிந்தர் சிங் தலைமையில் இப்போராட்டத்தை நடத்தினர். அங்கு காங்கிரஸ் தொண்டர்களும் கூடினர்.

தென்மும்பையில் உள்ள மும்பை காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெளியில் இரு கட்சிகளின் தொண்டர்களும் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பா.ஜ.க-வினர் ராகுல் காந்திக்கு எதிராக கோஷமிட்டனர். அதோடு கட்சி அலுவலகத்திற்கு வெளியில் வைக்கப்பட்டு இருந்த பேனரை கிழித்ததோடு, அதில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் படங்கள் மீது இங்க் தெளித்தனர்.

அவர்களின் போராட்டம் ஒரு கட்டத்தில் மோசமடைந்தது. பா.ஜ.க தொண்டர்கள் காங்கிரஸ் அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பொருள்களை அடித்து உடைத்து அலுவலகத்தை சூறையாடினர். கண்ணாடி கதவை உடைத்தனர். போலீஸார் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். மேலும் சிலரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். காங்கிரஸ் அலுவலகத்தை அடித்து நொறுக்கியது தொடர்பாக பா.ஜ.க நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்வத்தால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக மும்பை காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், "இது ஜனநாயக போராட்டம் கிடையாது, போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட தாக்குதல், உள்துறை அமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

போலீஸார் பிரகாஷ் அம்பேத்கரின் பேரணிக்கு பாதுகாப்புக்குச் சென்ற நேரத்தில் இத்தாக்குதல் நடந்துள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் நானாபட்டோலேவும் இத்தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ளார். இச்சம்வத்தை தொடர்ந்து காங்கிரஸ் அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Mumbai: ``மத கலப்பு திருமண தம்பதிகளுக்கு பாதுகாப்பான வீடு..'' - போலீஸாருக்கு கோர்ட் உத்தரவு

மகாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த 23 வயது இளைஞர் அதே வயதுடைய மாற்றுமத பெண்ணை காதலித்து வந்தார். அவர்கள் 2019-ம் ஆண்டிலிருந்து ஒன்றாக படித்தபோது காதலிக்க ஆரம்பித்தனர். ஆனால் அவர்களது உறவுக்கு பெற்றோர்... மேலும் பார்க்க

Karnataka: ``பெண் அமைச்சரிடம் தகாத வார்த்தை.." - பாஜக நிர்வாகி சி.டி.ரவி கைது

நாடாளுமன்றத்தில் அண்ணல் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்து நாடுமுழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், கர்நாடக... மேலும் பார்க்க

Doctor Vikatan: காதிலிருந்து வரும் சத்தம்... Ear phone பயன்பாடுதான் காரணமா?

Doctor Vikatan: என் மகனுக்கு வயது 25. அவனுக்கு கடந்த சில தினங்களாக காது அடைத்துக்கொண்டதாகச் சொல்கிறான். காதிலிருந்து சத்தம் வருவதாகவும் சொல்கிறான். மருந்துக் கடையில் காதுகளைச் சுத்தப்படுத்தும் டிராப்ஸ... மேலும் பார்க்க

``என் பெயரை ஏன் சொல்லவில்லை?'' - அமித் ஷா கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் மோதல்!

அம்பேத்கர் குறித்து நாடாளுமன்றத்தில் அமைச்சர் அமித் ஷா பேசிய கருத்துக்கு, கண்டனம் தெரிவிக்கும் வகையில் தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மற்ற ஊர்களில் காலை ஆர்ப்பாட்டம்... மேலும் பார்க்க

Health: கத்தரிக்காய், அவரைக்காய், புடலங்காய்... எந்தக் காய்கறியில் என்ன சத்து இருக்கிறது?

காய்கறிகளில் உள்ள சத்துகளையும் காய்கறிகள் வாங்கும்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களையும் இங்கே அலசுகிறார் உணவு ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி.''வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கி வந்தவுடன், நன்றாகக் கழு... மேலும் பார்க்க