செய்திகள் :

Doctor Vikatan: காதிலிருந்து வரும் சத்தம்... Ear phone பயன்பாடுதான் காரணமா?

post image

Doctor Vikatan: என் மகனுக்கு வயது 25. அவனுக்கு கடந்த சில தினங்களாக காது அடைத்துக்கொண்டதாகச் சொல்கிறான். காதிலிருந்து சத்தம் வருவதாகவும் சொல்கிறான். மருந்துக் கடையில் காதுகளைச் சுத்தப்படுத்தும் டிராப்ஸ் வாங்கிப் போட்டும் பிரச்னை சரியாகவில்லை. இ.என்.டி மருத்துவரிடம் காட்டி, காதுகளை சுத்தப் படுத்தலாமா? தொடர்ச்சியாக இயர்போன் (ear phone) பயன்படுத்துவதுதான் இந்தப் பிரச்னைக்கு காரணமாக இருக்குமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இ.என்.டி மருத்துவர் பி.நட்ராஜ்

மருத்துவர் பி.நட்ராஜ்

காதில் அடைப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இவற்றுள்  இரண்டு காரணங்கள் பொதுவானவை.  ஒன்று காதில் குருமி அடைத்துக் கொள்வது...  இரண்டாவது சளி அல்லது தொண்டை வலி.

காதில் குறும்பி  உருவாவது இயற்கையே, சிறிதளவு தினமும் உற்பத்தியாகும் இந்தக் குறும்பி, தானாகவே வெளியே வருவதற்கு இயற்கையான அமைப்பு இருக்கிறது. நாம் விரல் அல்லது வேறு ஏதாவது பொருள் கொண்டு குடைவதாலோ அல்லது நெடுநேரம் இயர்போன் (ear phone) போன்ற கருவிகள் பயன்படுத்துவதாலோ இந்தக் குறுமி வெளியேறாமல் உள்ளேயே  தங்கிவிடும்.  நாள்பட நாள்பட  காதில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அப்போது ENT மருத்துவரை அணுகி அவரிடம் அதைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டி வரும்.

ENT மருத்துவரை சந்தித்தால் அடைப்பு எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து அதற்கான உரிய சிகிச்சையைப் பரிந்துரை செய்வார்.

தொற்று அல்லது ஒவ்வாமையினால் சளி பிடித்தாலோ அல்லது தொண்டை வலி ஏற்பட்டாலோ அதன் விளைவாகவும் காதில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு நேர்ந்தால் அந்தச் சளி தானாகவோ அல்லது சிகிச்சை மூலமாகவோ சரியான பின் காதில் அடைப்பு தானாகவே நீங்கிவிடும். இவை இரண்டும் பொதுவாக அடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்.  இவை அல்லாமல் அரிதாக வரும் காரணங்கள் பல உள்ளன.

 ENT மருத்துவரை சந்தித்தால் அடைப்பு எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து அதற்கான உரிய சிகிச்சையைப் பரிந்துரை செய்வார். காதில் அடைப்பு ஏற்படுத்தும் எந்தக் காரணத்தினாலும் காதில் சத்தமும் ஏற்படலாம். அந்த வகையில் இயர்போன் (ear phone) பயன்பாடும் இதற்கொரு காரணமாகலாம். எனவே, உங்கள் மகனை ENT மருத்துவரிடம் காண்பித்து எதனால் இந்த அடைப்பு ஏற்படுகிறது என்பதை அறிந்துகொண்டு அதற்கான உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் நிவாரணம் கிடைக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

மஸ்ஜித் - கோயில் விவகாரம்: ``இந்துக்களின் தலைவராகலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்" - மோகன் பகவத்

"விஸ்வகுரு பாரத்" கருப்பொருளில் விரிவுரைத் தொடர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்தது. இந்த நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது, ``சுவாமி ராமகிருஷ்ணன் மிஷனி... மேலும் பார்க்க

Mumbai: ``மத கலப்பு திருமண தம்பதிகளுக்கு பாதுகாப்பான வீடு..'' - போலீஸாருக்கு கோர்ட் உத்தரவு

மகாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த 23 வயது இளைஞர் அதே வயதுடைய மாற்றுமத பெண்ணை காதலித்து வந்தார். அவர்கள் 2019-ம் ஆண்டிலிருந்து ஒன்றாக படித்தபோது காதலிக்க ஆரம்பித்தனர். ஆனால் அவர்களது உறவுக்கு பெற்றோர்... மேலும் பார்க்க

Karnataka: ``பெண் அமைச்சரிடம் தகாத வார்த்தை.." - பாஜக நிர்வாகி சி.டி.ரவி கைது

நாடாளுமன்றத்தில் அண்ணல் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்து நாடுமுழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், கர்நாடக... மேலும் பார்க்க

``என் பெயரை ஏன் சொல்லவில்லை?'' - அமித் ஷா கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் மோதல்!

அம்பேத்கர் குறித்து நாடாளுமன்றத்தில் அமைச்சர் அமித் ஷா பேசிய கருத்துக்கு, கண்டனம் தெரிவிக்கும் வகையில் தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மற்ற ஊர்களில் காலை ஆர்ப்பாட்டம்... மேலும் பார்க்க

Mumbai: காங்கிரஸ் அலுவலகத்தை சூறையாடிய பாஜக தொண்டர்கள்; தடியடி நடத்தி விரட்டியடிப்பு -என்ன நடந்தது?

மத்திய அமைச்சர் அமித் ஷா பாபாசாஹேப் அம்பேத்கருக்கு எதிராக பேசியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் பாராளுமன்றத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்காக ராகுல் காந்தி மீது டெல்லி போலீஸார் வழக்குப்பத... மேலும் பார்க்க

Health: கத்தரிக்காய், அவரைக்காய், புடலங்காய்... எந்தக் காய்கறியில் என்ன சத்து இருக்கிறது?

காய்கறிகளில் உள்ள சத்துகளையும் காய்கறிகள் வாங்கும்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களையும் இங்கே அலசுகிறார் உணவு ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி.''வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கி வந்தவுடன், நன்றாகக் கழு... மேலும் பார்க்க