தில்லி பாஜக அலுவலகம் அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையால் பீதி
தில்லியில் உள்ள பாஜக மாநில அலுவலகம் அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு நிலவியது.
தலைநகர் தில்லியில் பாஜக மாநில அலுவலகம் அருகே கேட்பாரற்றுக் கிடந்த பையால் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது.
உடனே அப்பகுதியை சுற்றி வளைத்து, பையை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அந்த பை ஊடகவியலாளர் ஒருவருடையது என தெரியவந்தது.
பின்னர் அந்த பையை உரிமையாளரிடம் போலீஸா ஒப்படைந்தனர். நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.
குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு தேதி மாற்றம்!
இதனிடையே, பாஜக அலுவலகத்தைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.