குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு தேதி மாற்றம்!
குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வு கடந்த செப்.14 ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது.
இந்தத் தேர்வை எதிா்கொள்வோா் உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய டிச. 18-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு பிப். 2, 8 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையும் படிக்க: பேரவைத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம்: முதல்வர் ஸ்டாலின்
இந்த நிலையில், முதன்மைத் தேர்வு தேதி மற்றும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, குரூப் 2ஏ முதன்மைத் தேர்வு பிப். 8 ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30 வரை நடைபெறவுள்ளது.
அதேபோல், குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான முதல் தாளான தமிழ் மொழி தகுதித் தேர்வு பிப். 8 பிற்பகல் 2.30 முதல் மாலை 5.30 வரை நடைபெறும் என்றும், முதன்மைத் தேர்வுக்கான இரண்டாம் தாள், பிப். 23 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் 37 மையங்களில் நடைபெறவுள்ளது.
முன்னதாக கணினி வழியில்(CBT Mode) குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ஓஎம்ஆர் ஷீட் (OMR Sheet) முறையிலேயே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.