இந்தியாவை எதிர்க்க புதிய திட்டம்..! ஜியார்ஜ் பெய்லி பேட்டி!
ஆஸ்திரேலியாவின் தலைமை தேர்வுக் குழு தலைவர் ஜியார்ஜ் பெய்லி இந்தியாவுக்கு எதிராக வித்தியாசமாக முயன்று பார்க்க இளம் வீரர் கொன்ஸ்டாஸை அணியில் சேர்த்திருப்பதாகக் கூறியுள்ளார்.
முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் நாதன் மெக்ஸ்வீனி விளையாடினார். அவருக்குப் பதிலாக தற்போது இளம் அதிரடி வீரர் சாம் கொன்ஸ்டாஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
3 போட்டிகளில் 72 ரன்கள் எடுத்த நாதன் மெக்ஸ்வீனியின் சராசரி 14.40ஆக இருக்கிறது. முதல்தர போட்டிகளில் மெக்ஸ்வீனி தொடக்க வீரராக இருந்ததில்லை. அதனால் தடுமாறி இருக்கலாம்.
பார்டர் கவாஸ்கர் தொடர் 1-1 என சமநிலையில் இருக்கும்போது 4ஆவது டெஸ்ட் பாக்ஸிங் டே போட்டியாக டிச.26ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில் ஆஸி. தலைமை தேர்வுக்குழு தலைவர் ஜியார்ஜ் பெய்லி கூறியதாவது:
மெக்ஸ்வீனியை நீக்கியது ஏன்?
மெக்ஸ்வீனியை நீக்கியது மிகவும் கடினமாக முடிவு. குறைவான காலமே கொடுக்கப்பட்டது. மெக்ஸ்வீனியும் சொதப்பிவிட்டார். அவருக்கு தொடக்கத்திலேயே இது குறித்து நாங்கள் கூறியிருந்தோம்.
டெஸ்ட் அணிக்கு விளையாடும் தகுதியும் மனத்திட்பமும் மெக்ஸ்வீனியிடம் இருப்பதாக நம்புகிறோம். எங்களது டாப் 3 வீரர்கள் ஒரே மாதிரியாக விளையாடுவதை பார்க்கிறோம். அதனால், இந்தியாவுக்கு எதிராக சற்று வித்தியமான ஒன்றை முயற்சித்து பார்க்கலாம் என இருக்கிறோம்.
கொன்ஸ்டாஸ், மார்கஸ் ஹாரிஸ், பென்கிராப்ட் வரிசையில் டெஸ்ட்டில் அதிகமான ரன்கள் குவித்ததால் மெக்ஸ்வீனி தேர்வுசெய்யப்பட்டார்.
சாம் கொன்டாஸ் தேர்வு ஏன்?
ஆனால், சரியாக விளையாடவில்லை. இருப்பினும் இது அவரது தொடக்க காலம் மட்டுமே. சாம் கொன்ஸ்டாஸின் அணுகுமுறை முற்றிலும் மாறுபட்டிருக்கும். அதனால் அவரை தேர்ந்தெடுத்து இருக்கிறோம்.
வெப்ஸ்டர், இங்கிலிஷ் என மற்ற பேட்டிங் வாய்ப்புகளும் உள்ளன. பாக்ஸிங் டே டெஸ்ட்டில் புதிய அணியை களமிறக்குவார்கள் என நினைக்கிறேன்.
மழை வராமல் இருந்திருந்தால் மார்ஷ் அதிகமாக பந்துவீசி இருப்பார். இந்தத் தொடர் முழுவதும் பந்துவீசவே மிட்செல் மார்ஷை அணியில் எடுத்தோம்.
மெல்போர்ன் - சிட்னியில் என்ன ஆகும் என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த இரண்டு போட்டிகளில் எங்களுக்கு நிறைய மாற்று வழிகள் இருக்கின்றன என்றார்.