மீண்டும் கேப்டனாக களமிறங்கும் ரஷீத்கான்!
எம்ஐ கேப்டவுன் அணியின் புதிய கேப்டனாக ரஷீத்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய பிரீமியர் லீக் தொடர் போலவே உலகமெங்கிலும் 10, 20 ஓவர் தொடர்கள் அதிகளவில் பிரபலமாகிவிட்டன. இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற ஐபிஎல் தொடர் போலவே தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ20 (தென்னாப்பிரிக்கா20) போட்டிகளும் மிகவும் பிரபலாமாகி வருகின்றன.
இந்திய வீரர்கள் தவிர்த்து மற்ற நாடுகளில் உள்ள அனைத்து வீரர்களும் இந்தத் தொடரில் விளையாடுகின்றனர். ஐபிஎல்லில் உள்ள கிளப் அணிகளின் உரிமையாளர்கள் அங்கு தங்கள் பிரான்சைஸ்களின் பெயரில் அங்குள்ள நகரங்களுக்கு ஏற்றவகையில் அணிகளை வாங்கியுள்ளனர்.
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், எம் ஐ கேப்டவுன், சன்ரைஸ் ஈஸ்டன் கேப், பிரிடோரியா கேபிடல்ஸ், பார்ல் ராயல்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
அந்த வகையில் முமபை இந்தியன்ஸ் கேப் டவுன் அணியின் கேப்டனாக ஆப்கானிஸ்தான் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
போட்டியின் முதல் சீசனில் ரஷீத்கான் அணியின் கேப்டனாக இருந்தார். ஆனால் காயம் காரணமாக இரண்டாவது சீசனில் விளையாடவில்லை.
நட்சத்திரவீரர்கள் நிறைந்த அணியை வழிநடத்தும் பொறுப்பு ரஷீத் கானுக்கு வழங்கப்பட்டுள்ளது. கேப் டவுன் அணியில் பென் ஸ்டோக்ஸ், ட்ரென்ட் போல்ட் போன்ற அனுபவமிக்க வீரர்களுடன் ரியான் ரிக்கெல்டன், டெவால்ட் ப்ரீவிஸ், ககிசோ ரபாடா மற்றும் நுவான் துஷாரா போன்றவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
அணியில் பேட்டிங் சற்று பலவீனமாகத் தெரிந்தாலும், பந்து வீச்சு அற்புதமாக இருக்கிறது. எஸ்ஏ20 இன் மூன்றாவது தொடர் ஜனவரி 9 ஆம் தேதி தொடங்குகிறது.