ஓம் பிரகாஷ் சௌதாலா: பிரதமர் மோடி இரங்கல்
ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் பல ஆண்டுகளாக மாநில அரசியலில் தீவிரமாக செயல்பட்டவர்.
சவுத்ரி தேவி லாலின் பணிகளை முன்னெடுத்துச் செல்ல தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டார்.
இந்தத் துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ஓம் பிரகாஷ் சௌதாலா மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஹரியாணா முதல்வர் ஹரியாணா முதல்வர் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா காலமானார்
இந்திய தேசிய லோக் தள தலைவரும் ஹரியாணா மாநில முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 89. இவர் ஹரியாணா மாநிலத்தில் ஐந்து முறை முதல்வராகவும் முன்னாள் துணை பிரதமராகவும் இருந்த சௌதாரி தேவி லால் மகன் ஆவார்.