செய்திகள் :

Karnataka: ``பெண் அமைச்சரிடம் தகாத வார்த்தை.." - பாஜக நிர்வாகி சி.டி.ரவி கைது

post image

நாடாளுமன்றத்தில் அண்ணல் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்து நாடுமுழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், கர்நாடகாவில் மாநில சட்ட மேலவையில் போராட்டம் நடத்தியது. இதற்கு பா.ஜ.க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நேரத்தில், பா.ஜ.க எம்.எல்.சி, சி.டி.ரவிக்கும் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது லட்சுமி ஹெப்பால்கருக்கு எதிராக சி.டி.ரவி தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

சிடி ரவி

அதனால், லட்சுமி ஹெப்பால்கரின் ஆதரவாளர்கள் தன்னைத் தாக்கியதாக குற்றம் சாட்டிய சி.டி ரவி, "நான் எந்த தவறான மொழியையும் பயன்படுத்தவில்லை. என்னைக் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். ஒரு எம்.எல்.ஏ.வுக்கே இங்குப் பாதுகாப்பு இல்லை என்றால், மாநிலத்தில் உள்ள மற்ற எம்.எல்.ஏ.க்களின் நிலை என்ன?" என்று காங்கிரசுக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தினார்.

சிடி ரவி கைது

ஆட்சேபனைக்குரிய வார்த்தையைப் சிடி ரவி பயன்படுத்தியதையடுத்து, சபாநாயகர் பசவராஜ் ஹொரட்டியிடம் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் புகார் அளித்தார். காவல்நிலையத்திலும் புகாரளித்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டார். புகாரின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த ஹிரேபகேவாடி காவல்துறை, தர்ணாவில் அமர்ந்திருந்த சி.டி.ரவியை கைது செய்தது. கே.எஸ்.ஆர்.பி படைப்பிரிவின் பாதுகாப்பில் சி.டி.ரவி நந்தகடா காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மஸ்ஜித் - கோயில் விவகாரம்: ``இந்துக்களின் தலைவராகலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்" - மோகன் பகவத்

"விஸ்வகுரு பாரத்" கருப்பொருளில் விரிவுரைத் தொடர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்தது. இந்த நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது, ``சுவாமி ராமகிருஷ்ணன் மிஷனி... மேலும் பார்க்க

Mumbai: ``மத கலப்பு திருமண தம்பதிகளுக்கு பாதுகாப்பான வீடு..'' - போலீஸாருக்கு கோர்ட் உத்தரவு

மகாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த 23 வயது இளைஞர் அதே வயதுடைய மாற்றுமத பெண்ணை காதலித்து வந்தார். அவர்கள் 2019-ம் ஆண்டிலிருந்து ஒன்றாக படித்தபோது காதலிக்க ஆரம்பித்தனர். ஆனால் அவர்களது உறவுக்கு பெற்றோர்... மேலும் பார்க்க

Doctor Vikatan: காதிலிருந்து வரும் சத்தம்... Ear phone பயன்பாடுதான் காரணமா?

Doctor Vikatan: என் மகனுக்கு வயது 25. அவனுக்கு கடந்த சில தினங்களாக காது அடைத்துக்கொண்டதாகச் சொல்கிறான். காதிலிருந்து சத்தம் வருவதாகவும் சொல்கிறான். மருந்துக் கடையில் காதுகளைச் சுத்தப்படுத்தும் டிராப்ஸ... மேலும் பார்க்க

``என் பெயரை ஏன் சொல்லவில்லை?'' - அமித் ஷா கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் மோதல்!

அம்பேத்கர் குறித்து நாடாளுமன்றத்தில் அமைச்சர் அமித் ஷா பேசிய கருத்துக்கு, கண்டனம் தெரிவிக்கும் வகையில் தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மற்ற ஊர்களில் காலை ஆர்ப்பாட்டம்... மேலும் பார்க்க

Mumbai: காங்கிரஸ் அலுவலகத்தை சூறையாடிய பாஜக தொண்டர்கள்; தடியடி நடத்தி விரட்டியடிப்பு -என்ன நடந்தது?

மத்திய அமைச்சர் அமித் ஷா பாபாசாஹேப் அம்பேத்கருக்கு எதிராக பேசியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் பாராளுமன்றத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்காக ராகுல் காந்தி மீது டெல்லி போலீஸார் வழக்குப்பத... மேலும் பார்க்க

Health: கத்தரிக்காய், அவரைக்காய், புடலங்காய்... எந்தக் காய்கறியில் என்ன சத்து இருக்கிறது?

காய்கறிகளில் உள்ள சத்துகளையும் காய்கறிகள் வாங்கும்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களையும் இங்கே அலசுகிறார் உணவு ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி.''வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கி வந்தவுடன், நன்றாகக் கழு... மேலும் பார்க்க