அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?
அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (20-12-2024) மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.
இதன்காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தில்லி போதை மறுவாழ்வு மையம் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்!
இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.