இந்தியா தொடர், சாம்பியன்ஸ் டிராபிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
GST: பாப்கார்னுக்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி; அதிர்ச்சியான மக்கள்; விளக்கமளிக்கும் நிர்மலா சீதாராமன்
பேக் செய்யப்பட்ட பாப்கார்னுக்கு 12 சதவிகித ஜி.எஸ்.டியும், கேரமல் பாப்கார்னுக்கு 18 சதவிகித ஜி.எஸ்.டியும் விதிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் கிளப்பியது.
இதை தெளிவுப்படுத்தும் விதமாக ஜி.எஸ்.டி கவுன்சில் நேற்று கொடுத்திருக்கும் விளக்கத்தின் படி, 'பேக் மற்றும் லேபிள் செய்யப்படாத உப்பு மற்றும் காரம் கலந்த பாப்கார்னுக்கு வெறும் 5 சதவிகித ஜி.எஸ்.டி மட்டுமே விதிக்கப்படும். ஆனால், அதே பாப்கார்ன் பேக் மற்றும் லேபிள் செய்யப்பட்டிருந்தால் 12 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது. கேரமல் பாப்கார்னுக்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது' என்று கூறப்பட்டுள்ளது.
இதுக்குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளிக்கையில், "சாதாரண பாப்கார்ன் உப்பு உணவு வகைகளில் வருவதால் 5 சதவிகித வரி விதிக்கப்படுகிறது. இதுவே பேக் செய்யப்படும்போது 12 சதவிகித வரி வருகிறது.
கேரமல் பாப்கார்னில் சர்க்கரை சேர்க்கப்படுவதால், அது இனிப்பு பண்டமாக கருதப்பட்டு, பொதுவாக இனிப்பு பண்டங்களுக்கு விதிக்கப்படும் 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி இந்த பாப்கார்னுக்கு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.