குடியரசு நாள் அணிவகுப்பில் தமிழகம் புறக்கணிப்பு: மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசா...
சென்னை: ஊழியர்களுக்கு கார், பைக்குகள் பரிசளித்து ஊக்குவித்த தனியார் நிறுவனம்!
சென்னை: தங்களது நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியர்களுக்கு கார்கள், பைக்குகள், ஸ்கூட்டர்கள் பரிசளித்து தனியார் நிறுவனம் ஒன்று அவர்களை ஊக்குவித்துள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொருள்கள் போக்குவரத்து தனியார் நிறுவனம் ஒன்றில் அங்குள்ள 20 ஊழியர்களுக்கு டாடா கார்கள், ராயல் என்ஃபீல்டு பைக்குகள், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அந்நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை இயக்குநருமான டென்ஸில் ராயன் கூறியிருப்பதாவது, “பணியாளர் நலன் சார்ந்த இத்தகைய நடவடிக்கைகளால் பணியாளர் தரப்பில் திருப்தியடைவதுடன் அவர்கள் ஊக்குவிக்கப்படுவதால், தொழிலில் அவர்களது பங்களிப்பும் ஈடுபாடும் மேலும் அதிகரிக்கும்” எனக் கூறினார்.