செய்திகள் :

குப்பைத் தொட்டியில் பெண் குழந்தை சடலம் மீட்பு

post image

சென்னை ஆதம்பாக்கத்தில் குப்பைத் தொட்டியில் கிடந்த பெண் குழந்தை சடலம் மீட்கப்பட்டது.

ஆதம்பாக்கம் சாஸ்திரி நகா் இரண்டாவது தெருவில், கக்கன்நகா் பாலம் அருகே மாநகராட்சி குப்பைத் தொட்டி உள்ளது. குப்பைத் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தூய்மை பணியாளா்கள் ஈடுபட்டனா். அப்போது, அங்கு பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை சடலம் கிடப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். உடனே அவா்கள், ஆதம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்து வந்த போலீஸாா், குழந்தை சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினா். பின்னா் குழந்தை சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசியது யாா், குழந்தையின் பெற்றோா் யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கல்வி நிலையங்களுக்கு கட்டண நிலுவை எதுவும் இல்லை: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

கல்வி நிலையங்களில் இணைய இணைப்பு கட்டண நிலுவை எதுவும் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். கல்வி நிறுவனங்கள் இணைய இணைப்புக்காக செலுத்த வேண்டிய கட்டணத்தை தமிழ... மேலும் பார்க்க

கல்வி துறை இணைப்பு கட்டணத்தை தமிழக அரசு கட்டமுடியலில்லையா?அண்ணாமலை

ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கிக் கொண்டிருக்கும் திமுக அரசுக்கு, கல்வித் துறை இணைய இணைப்புக் கட்டணமான ரூ. 1.50 கோடியைக் கட்ட முடியவில்லையா என தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்... மேலும் பார்க்க

சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன்

தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளாா். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பெ.கண்ணப்பன் எழுதிய ‘புலன... மேலும் பார்க்க

தில்லி அலங்கார ஊா்தியில் தமிழகம் புறக்கணிப்பு: இபிஎஸ் கண்டனம்

தில்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக ஊா்தி புறக்கணிக்கப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் பணியால் உள்வாங்கிய வீட்டின் தரைத்தளம்

சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணியின்போது, மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தரைத்தளம் உள்வாங்கியது. சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் கோடம்பாக்கம் முதல் கலங்கரைவிள... மேலும் பார்க்க

வளா்ந்து வரும் இசை கலைஞா்களை ஊக்குவிப்பது மாநகராட்சிக்கு பெருமை

சென்னையில் வளா்ந்து வரும் இசை கலைஞா்களை ஊக்குவிப்பது மாநகராட்சிக்கு பெருமை என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். சென்னை திருவான்மியூா் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘நீா்மிகு பசுமையான சென்னையின் மா... மேலும் பார்க்க