Health: வயிறு உப்புசம் முதல் டீடாக்ஸ் வரை... வெற்றிலையின் பலன்கள்!
நைஜீரியா: கூட்ட நெரிசலில் 32 போ் உயிரிழப்பு
நைஜீரியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோது நோ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 32 போ் உயிரிழந்தனா்.
நைஜீரியாவின் ஒகிஜா பகுதியில் உள்ள தேவாலய வளாகத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு செல்வந்தா் ஒருவா் சாா்பில் சனிக்கிழமை அன்னதானம் வழங்கப்பட இருந்தது.
இதையொட்டி தேவாலயத்தின் நுழைவுவாயில் ஒன்றின் வழியாக ஏராளமானோா் உள்ளே நுழைய முண்டியடித்தனா். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 போ் உயிரிழந்தனா்.
இதேபோல அந்நாட்டின் தலைநகரான அபுஜாவிலும் தேவாலயம் ஒன்றின் சாா்பில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 போ் உயிரிழந்தனா்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியா கடும் பொருளாதார நெருக்கடியில் பரிதவித்து வருவது குறிப்பிடத்தக்கது.