செய்திகள் :

Relationship: திருமணத்துக்கு முந்தைய காதல்... எந்த வகை கணவர் சகஜமாக எடுத்துக் கொள்வார்?

post image

ணுக்கோ அல்லது பெண்ணுக்கோ திருமணத்துக்கு முந்தைய காதல் என்பது வெகு சகஜமான விஷயம்தான். சிலருக்கு அது திருமணமாக தொடரும்; சிலருக்கு பிரேக் அப்பாக பிரிந்து விடுகிறது. நம் கலாசாரத்தில் மனைவியிடம், 'நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நான் ஒரு பொண்ணை லவ் பண்ணேன்' என்று கணவன் சொல்வதை மனைவிகள் 'அது கல்யாணத்துக்கு முன்னாடிதானே' என்று லேசாக எடுத்துக்கொண்டு கடந்து விடுகிறார்கள். ஆனால், இதைக் கணவர்கள் மட்டும் 'உடல் ஒழுக்கம் சார்ந்த விஷயமாக'வே பார்க்கிறார்கள். எல்லாக் கணவர்களும் இப்படியில்லை என்றாலும், பெருவாரியான கணவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். அதனால், ஒரு மனைவி திருமணத்துக்கு முந்தைய தன்னுடைய காதலைப் பற்றி தன் கணவரிடம் சொல்லலாமா; சொல்லலாம் என்றால் எப்போது சொல்லலாம்; அல்லது எந்த நிலையிலும் சொல்லவே கூடாதா... டாக்டர் ஷாலினியிடம் கேட்டோம்.

Relationship

''திருமணத்துக்கு முந்தைய காதலை கணவனிடம் சொல்வதை உங்கள் இடத்தில் இருந்து மட்டுமே யோசிக்காமல், கணவருடைய இடத்தில் இருந்துதான் அதிகமாக யோசிக்க வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு கனமான பொருளை ஒருவரிடம் கொடுக்கப் போகிறீர்கள் என்றால், அந்த வெயிட்டைத் தாங்குகிற அளவுக்கு அவருக்கு பலம் இருக்க வேண்டும். பலமில்லாத ஆளிடம் கனமானப் பொருளைக் கொடுத்தீர்களென்றால், அவரும் கீழே விழுந்து, உங்களையும் சேர்த்தே நசுக்கி விடலாம். அதனால், 'காதல் செய்கிற பெண்களெல்லாம் ஒழுக்கம் தவறித்தான் போயிருப்பார்கள்' என்ற எண்ணத்துடன் இருக்கிற கணவர்களிடம் உங்கள் இறந்த காலத்தைப்பற்றி சொல்லாமல் இருப்பதுதான் குடும்பத்துக்கு பாதுகாப்பு.

பொதுவாக, ஒரு கணவன் தன் மனைவியிடம் 'நான் ரொம்ப ஃபார்வர்டு. நான் ரொம்ப மாடர்ன். கல்யாணத்துக்கு முன்னாடி நீ யாரையாவது லவ் பண்ணியிருக்கியா. நான் ஒண்ணும் தப்பா நினைக்க மாட்டேன், சொல்லு' என்று கேட்பதே அநாகரிகம்தான். இங்கே எல்லா ஆண்களின் வீட்டுப் பெண்களும்தான் காதலிக்கிறார்கள். நாமெல்லாம் அடுத்தவர்களிடம் 'நீ ஐஸ்கிரீம் சாப்பிட்டிருக்கியா' என்று கேட்க மாட்டோம் இல்லையா? மனிதர்களாகப் பிறந்தால் ஐஸ்கிரீம் சாப்பிடுவது இயல்பு என்பது மாதிரிதான் காதலும். அதனால், அதைப்பற்றி மனைவியிடம் கேள்வி கேட்காமல் இருப்பதுதான் உச்சக்கட்ட நாகரிகம்.

Relationship

ஒருவேளை உங்கள் கணவர் அப்படிக் கேட்டாலும், 'கணவனிடம் எதையுமே மறைக்காத உலகத்தின் ஆகச் சிறந்த மனைவி' நாமாகத்தான் இருக்க வேண்டும் என்று மடமடவென்று ஒப்பிக்காதீர்கள். 'ஒருத்தன் பின்னாடியே சுத்திக்கிட்டிருந்தான்; ஒரு நாள் லவ் பண்றேன்னு சொல்லிட்டான். அதெல்லாம் அவ்வளவு சீரியஸான விஷயம் கிடையாதுங்க' என்பது மாதிரி பட்டும்படாமல் சொல்லிவிட்டு அந்தப் பேச்சை கடந்து விடுங்கள். அப்போதுதான் உங்கள் எதிர்கால திருமண வாழ்க்கை காப்பாற்றப்படும். திருமணத்துக்கு முந்தையக் காதலை கணவனிடம் ஒப்புவிக்கிற பெண்கள், 'தன் நேர்மையைக் கணவன் பாராட்டுவான்'; 'மனைவி பாதிக்கப்பட்டிருக்கிறாளே என்று அன்பினால் தன்னைத் தாங்குவான்'' என்று நினைத்துத்தான் சொல்கிறார்கள். ஆனால், உண்மை அப்படியில்லை. கணவர்களில் அதிகம் பேர் அதை வைத்து மனைவியின் ஒழுக்கத்தைக் குறைவாக பேசுவது; பல்வேறு சந்தர்ப்பங்களில் குத்திக் காட்டி பேசுவது; மனைவியின் குடும்பத்தை அவமானப்படுத்துவது என்றுதான் நடந்துகொள்கிறார்கள். இது எல்லா கணவர்களுக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு வகை. உங்களுக்கு அமைந்த கணவர் எந்த வகை என்று தெரிந்துகொண்ட பிறகு, லேசுபாசாக சொல்லிப் பாருங்கள். அதைக் கேட்டும் கேளாமல் இருப்பதுபோல இருந்தாரென்றால், அவருக்குப் புரிகிறது. அதே நேரம் அதில் ஆர்வம் காட்ட மறுக்கிறார் என்று அர்த்தம். அந்த இறந்த காலத்தை அப்படியே மூட்டைக் கட்டி போட்டுவிட்டு அடுத்த வேலையைப் பாருங்கள். படபடப்பாகக் கவனிக்கிறார் என்றால், அந்த இறந்த கால காதலைச் சொல்லாமல் மறைப்பது மட்டுமே உங்களுக்கும் உங்கள் குடும்ப வாழ்க்கைக்கும் நீங்கள் செய்கிற நன்மை'' என்று முடித்தார் டாக்டர் ஷாலினி.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

சாமானியர்கள் முதல் செலிப்ரிட்டீஸ் வரை... அதிகரிக்கும் விவாகரத்து - பாதிக்கப்படுவது பெண்களா, ஆண்களா?

திருமண வாழ்க்கையில், பிரபலங்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை விவாகரத்தை நாடுபவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. விவாகரத்தால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா, பெண்களா? சட்டம், சமூகம் என்ன ச... மேலும் பார்க்க

Relationship: இந்த 3-ம் இருந்தால் உங்கள் நண்பன் உங்களைக் காதலிக்கிறான் என்று அர்த்தம்!

தோழியை எப்போது காதலியாகப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள் ஆண்கள் என்பதை உளவியல் அடிப்படையில் எப்படி தெரிந்துகொள்வது என நமக்குச் சொல்கிறார்கள், உளவியல் ஆலோசகர் வருண் மற்றும் திவ்யபிரபா.friendship''நெருங்கிய ... மேலும் பார்க்க

Case history: இரண்டு மாமியார்கள் செய்த பிரச்னை... தப்பித்த தம்பதி! | காமத்துக்கு மரியாதை- 223

''திருமணமாகி ரெண்டு வருஷம் ஆச்சு. கன்சீவ் ஆகலைன்னு என்னைப் பார்க்க வந்திருந்தாங்க அந்த தம்பதி. ரெண்டு வருஷம்தானே ஆகுது. இதுக்குள்ள ட்ரீட்மென்ட்டுக்கு வர வேண்டிய அவசியமே இல்லீங்கன்னு சொன்னேன். அந்தப்பொ... மேலும் பார்க்க

கோவை பையன் - தைவான் பொண்ணு..! - சமூக சேவையில் மலர்ந்த காதல்; தமிழ் முறைப்படி திருமணம்

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் வேளாண்மை துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி விஜயலட்சுமி. இவர்கள் மகன் கே.எஸ்.வைஸ்... மேலும் பார்க்க

Relationship: அம்மா மேல பாசமா இருக்கிற பசங்க பொண்டாட்டி மேலேயும் பாசமா இருப்பாங்களா?

'அம்மா மேல பாசமா இருக்கிற பசங்க பொண்டாட்டி மேலேயும் பாசமா இருப்பாங்க’ - காலங்காலமாக வீட்டுப் பெரியவர்களால் இளம்பெண்களின் மனதில் விதைக்கப்பட்ட இந்த நம்பிக்கையில் எந்தளவுக்கு உண்மையிருக்கிறது? சொல்கிறார... மேலும் பார்க்க

Relationship: மனைவியுடன் மனம் ஒத்த வாழ்க்கை; ஆனாலும் இன்னொரு பெண்ணிடமும் காதல் வயப்படுவது ஏன்?

பார்ப்பதற்கு 'மேட் ஃபார் ஈச் அதர்' ஆகத் தெரிவார்கள். அருகில் சென்று பழகினால் 'ஆஹா, என்னவொரு அன்னியோன்யமான தம்பதி' என்று மற்றவர்கள் பாராட்டும் அளவுக்கு இருப்பார்கள். ஏதோவொரு கட்டத்தில், அந்த ஆண் இன்னொர... மேலும் பார்க்க