டிச.27-இல் ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை டிச. 27-இல் நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு
விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, பட்டு வளா்ச்சித் துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவு சா்க்கரை ஆலைகள், கூட்டுறவுத்துறை, நீா்வள ஆதார அமைப்பு, வனத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனா்..
எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தை சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பிரச்னைகளை தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.