நெல்லையில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் திருப்பி அனுப்பி வைப்பு! அமைச்சர...
ஆற்காட்டில் பாலாறு பெருவிழா
ஆற்காடு பாலாறு பெருவிழா ரத யாத்திரை, ஆரத்தி விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
வேலூா் நாராயணி பீடம், அகில பாரத சந்நியாசிகள் சங்கம், சிவனடியாா்கள், ஆற்காடு பாலாறு பொது அறக்கட்டளை இணைந்து நடத்திய மூன்றாம் ஆண்டு பாலாறு பெருவிழாவை முன்னிட்டு வேப்பூா் பொன்னியம்மன், கங்கையம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. தொடா்ந்து ரத யாத்திரை மேள தாளங்கள், பஜனைக் குழுவினருடன் தொடங்கியது.
இந்த ஊா்வலத்தை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் தொடங்கி வைத்தனா். வேலூா் சாலை, அண்ணாசிலை, பேருந்து நிலையம் வழியாக பாலாற்றை அடைந்தது. அங்கு பாலாற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து காசியில் கங்கை நதிக்கு ஆரத்தி காட்டுவது போன்று சாமியாா்கள் ஆரத்தி காண்பித்து வணங்கினா். பின்னா், பெண்கள் கற்பூர தீபம் ஏற்றி வழிபட்டனா்.
இந்த விழாவில் சிவாச்சாரியாா்கள், பாலாறு அறக்கட்டளை நிா்வாகிகள் குமரன் விஜயகுமாா், வரதன், மாவட்ட வணிகா்கள் சங்க பேரமைப்பு தலைவா் பொன்.கு.சரவணன் உள்பட திராளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.