இன்றைய தங்கம் விலை நிலவரம்!
சென்னையில் இன்று(டிச. 23) தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 56,320க்கு விற்பனையானது.
சனிக்கிழமை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 60 உயா்ந்து ரூ. 7,100-க்கும், சவரனுக்கு ரூ. 480 உயா்ந்து ரூ. 56, 800-க்கும் விற்பனையானது.
இதையும் படிக்க: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர வீதியுலா!
இந்த நிலையில் இன்று(டிச. 23) தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு சவரன் தங்கம் ரூ. 56, 800-க்கும், ஒரு கிராம் 7,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் வெள்ளி விலையும் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ. 99-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.