Bhavana: 'IndvsPak மேட்ச்ல நடந்த அந்த சம்பவம்' - Star Sports பாவனா சிறப்புப் பேட...
கடந்த 3 ஆண்டுகளாக உணவு உற்பத்தியில் சாதனை: முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு கடந்த 3 ஆண்டுகளாக உணவு உற்பத்தியில் சாதனை படைத்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், "உலகோர்க்கு உணவளிக்கும் உழவர்கள் அனைவருக்கும் தேசிய விவசாயிகள் நாள் வாழ்த்துகள்!
இலவச மின்சாரம், உழவர் சந்தைகள், கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி என வேளாண் பெருங்குடி மக்களைப் போற்றிய தலைவர் கலைஞர் வழியிலான நமது அரசு உங்களில் ஒருவனாக இருந்து உழவர்களைக் காக்கும்!
உணவு உற்பத்தியில் கடந்த 3 ஆண்டுகளாக நாம் படைத்து வரும் சாதனை தொடரும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: கலைஞர் பொற்கிழி விருதுகள்: வெளியான பட்டியல்!
தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அவரது வாழ்த்து செய்தியில், “நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் வேளாண் பணியை சமரசமின்றி மேற்கொண்டு, உலகிற்கே உணவளிக்கும் உன்னத சேவையாற்றும் உழவர் பெருமக்களுக்கு தேசிய விவசாயிகள் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், பருவமழை மற்றும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு திமுக அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.