செய்திகள் :

ஆஷஸ், டி20, ஒருநாள் தொடர்: இங்கிலாந்து மகளிரணி அறிவிப்பு!

post image

2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆஷஸ் தொடருக்கு இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துவித போட்டிகளுக்கும் ஹீதர் நைட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 நாள் டெஸ்ட் போட்டியில் விளையாடவிருக்கிறது.

ஜனவரி 2 ஆம் தேதி ஆஸ்திரேலியா செல்லும் இங்கிலாந்து அணி ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

டி20 போட்டிகள் சிட்னி, கான்பெரா, அடிலெய்ட் மைதானங்களிலும், ஒருநாள் போட்டிகள் சிட்னி, மெல்போர்ன், ஹோபர்ட் ஆகிய மைதானங்களிலும் நடைபெறுகிறது. 4 நாள்கள் கொண்ட பகலிரவு டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

ஆல்-ரவுண்டர் ஃப்ரெயா கெம்ப், சுழற்பந்துவீச்சாளர் லின்சே ஸ்மித் மற்றும் விக்கெட் கீப்பர் - பேட்டர் பெஸ் ஹீத் ஆகியோர் முதல் முறையாக ஆஷஸ் தொடருக்கான அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் காயத்தால் விலகிய பந்துவீச்சாளர் மஹிகா கௌர் அணிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து மகளிர் ஒருநாள் அணி

ஹீதர் நைட் (கேப்டன்ட்), டாமி பியூமண்ட், லாரன் பெல், மையா பௌச்சியர், ஆலிஸ் கேப்ஸி, கேட் கிராஸ், சார்லி டீன், சோபியா டங்க்லி, சோஃபி எக்லெஸ்டோன், லாரன் ஃபைலர், சாரா க்ளென், எமி ஜோன்ஸ், நாட் ஸ்கிவர்-ப்ரண்ட், டேனி வியாட்-ஹாட்ஜ்.

இங்கிலாந்து டி20 அணி

ஹீதர் நைட் (கேப்டன்),லாரன் பெல், மையா பௌச்சியர், ஆலிஸ் கேப்ஸி, சார்லி டீன், சோபியா டங்க்லி, சோஃபி எக்லெஸ்டோன், லாரன் ஃபைலர், டேனியல் கிப்சன், சாரா க்ளென், பெஸ் ஹீத், எமி ஜோன்ஸ், ஃப்ரேயா கெம்ப், லின்சி ஸ்மித், நாட் ஸ்கிவர்-ப்ரண்ட், டேனி வியாட்-ஹாட்ஜ்.

இங்கிலாந்து டெஸ்ட் அணி

ஹீதர் நைட்(கேப்டன்), டாமி பியூமண்ட், லாரன் பெல், மையா பௌச்சியர், கேட் கிராஸ், சார்லி டீன், சோபியா டங்க்லி, சோஃபி எக்லெஸ்டோன், லாரன் ஃபைலர், பெஸ் ஹீத், எமி ஜோன்ஸ், ரியானா மெக்டொனால்ட்-கே, நாட் ஸ்கிவர்-ப்ரண்ட், டேனி வியாட்-ஹாட்ஜ்.

சாம்பியன் டிராபிக்கான அணி தேடல்! அதிரடி காட்டும் நட்சத்திர வீரர்கள்!

2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதனால், ஏற்கனவே இந்திய அணியில் விளையாடிவர்களும், இளம்வீரர்களும் அதிரடியாக விளையாடிவருகின்றன.32-வது விஜய் ஹசாரா கோப்பை ஒர... மேலும் பார்க்க

விரைவில் சாம்பியன்ஸ் டிராபி; ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றிய பாகிஸ்தான்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி முழுமையாக கைப்பற்றியது.பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது... மேலும் பார்க்க

பயிற்சி பிட்சுகளால் இந்திய அணி அதிருப்தி! -மெல்போர்ன் திடல் மேற்பார்வையாளர்

பயிற்சி பிட்சுகளால் இந்திய அணி அதிருப்தியடைந்துள்ளதாக மெல்போர்ன் திடல் மேற்பார்வையாளர் தெரிவித்துள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் வருகிற டிசம்பர் 26 ஆம் ... மேலும் பார்க்க

முகமது ஷமி முழு உடல்தகுதியுடன் இல்லை; இந்திய அணிக்கு பிசிசிஐ கொடுத்த அதிர்ச்சி!

முகமது ஷமி முழு உடல்தகுதியுடன் இல்லாததால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியுடன் இணையமாட்டார் என்பதை பிசிசிஐ இன்று உறுதிப்படுத்தியுள்ளது.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு ... மேலும் பார்க்க

பிப்.23-ல் இந்தியா- பாக். மோதல்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அடுத்தாண்டு பிப்.23 ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவிருக்கின்றன.2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி, லாகூர், கராச்சி ஆகிய மைதானங்கள... மேலும் பார்க்க

அஸ்வினுக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்ட இளம் ஆல்ரவுண்டர்!

ரவிச்சந்திரன் அஸ்வினுக்குப் பதிலாக இந்திய அணியில் இளம் ஆல்ரவுண்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கவ... மேலும் பார்க்க