சூர்யா-44 தலைப்பு டீசர் அப்டேட்!
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் சூர்யா-44 படத்துக்கான புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கும், சூர்யா 44 படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் ஆரம்பமானது. தொடர்ந்து, ஊட்டி, கேரளத்தில் நடைபெற்று முழுமையாக முடிவடைந்தது. இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
நீண்ட நாள்களாவே படத்தின் பெயரை அறிவிக்காமல் சூர்யா - 44 என்றே அழைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இப்படத்திற்கான தலைப்பு டீசர் வருகிற டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகும் என்று ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.