அம்பேத்கா் குறித்த பேச்சு: உள்துறை அமைச்சா் அமித் ஷா ராஜினாமா கோரி டிச. 30 இல் ...
Bigg Boss 8: ``அன்ஷித்தா அம்மா எனக்கு கால் பண்ணி பேசும்போது...'' - சத்யா எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!
பிக் பாஸ் வீட்டில் பரபரப்பான ஆட்டம் தொடங்கிவிட்டது.
பிக் பாஸ் வீட்டில் இரு முறை இந்த சீசனில் கேப்டனாக இருந்தவர்கள் சத்யாவும், தர்ஷிகாவும்தான். இவர்கள் இருவரும் இரண்டாவது வார டபுள் எவிக்ஷனில் வெளியேறியிருந்தனர். இதில் சத்யாவை சந்தித்து ஒரு குட்டி பிக் பாஸ் சாட் போட்டோம். கலகலப்பான தொனியில் அனைத்து கேள்விகளுக்கு பதிலளித்த ஜாலி பண்ணினார்.
பேச தொடங்கிய அவர், `` முத்துக்குமரன் , `சத்யாவுக்கு நல்ல மனசு. அதுனாலதான் சத்யா ஜெஃப்ரி சத்யாவை விட்டுட்டு கோவா கேங் போனாலும் இந்த விஷயத்தை எண்ணி சத்யா ஜெய்ரிகிட்ட கோபப்படல. ஆனால் அந்த நல்ல மனசு இந்த விளையாட்டுக்கு சரிபட்டு வராது'னு நான் வெளில வர்றதுக்கு முந்தைய நாள் சொல்லியிருந்தார். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். எனக்கு நல்ல மனசுனு சொல்லி எனக்கு டப்பா அடிச்சுக்க நான் விரும்பல. எனக்கு ஜெப்ரி வளரணும்னு ரொம்ப ஆசை. எனக்கும் அவனுக்கும் நல்ல கனெக்ஷன். நான் அவனுக்கு நாமினேஷன் பாஸ் கொடுத்தது சமயத்துலகூட இதே விஷயத்தைதான் சொன்னேன்.
எனக்கு ஜெஃப்ரி மேல கோபமே வராததுக்கு காரணம் எங்களுக்கு இடையில இருக்கிற ஒரு புரிதல்தான். இந்த மாதிரியான விஷயத்தை `Possessiveness'னு சொல்வாங்க. என்னை பொறுத்த வரைக்கும் `Possessiveness' என்பது விட்டுக் கொடுக்கிறது.ஜெஃப்ரி சொன்ன மாதிரிதான். அவன் எப்போதும் என்கூடதான் இருப்பான்." என்றவர், `` எனக்கு பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருக்கிறவங்கள்ல `எப்படிறா...'ங்கிற மீம் டெம்ப்ளேட் ஃபீல் கொடுக்கிறது ரஞ்சித் அண்ணன்தான்.
இப்போ சமீபத்துல தீபக் அண்ணனுக்கு அருணுக்கு ஒரு சண்டை வந்தது. அப்போகூட சைட்ல நின்னுட்டு கும்பிட்டுட்டு இருந்தாரு. அதே மாதிரி கடந்த வாரம் நடந்த செங்கல் டாஸ்க்லையும் அப்படிதான் பண்ணினாரு. அந்த விஷயத்தை பார்க்கிறதுக்கு காமெடியாகதான் இருந்தது.
ஜாலியான விஷயங்களை பண்ற ரஞ்சித் அண்ணன் வேற மாதிரி ஒரு எண்டர்டெயினர். என் மனைவி ரம்யா ஏற்கெனவே பிக் பாஸ்ல இருந்திருக்காங்க. பிக் பாஸ் வீட்டுக்குள்ள போகும்போது, `சாப்பாடு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். இது ஒரு மைண்ட் கேம். இதுக்கு முன்னாடி போனவங்க பேசினதையெல்லாம் கேளு'னு சொன்னாங்க. ஆனால், அந்த விஷயங்கள் என்னை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணிடும்னு டயலாக்லாம் பேசிட்டு பார்க்காமல் விட்டுடேன். பிக் பாஸ் வீட்டுக்குள்ள போனதுக்குப் பிறகுதான் இதுகெல்லாம் தயாராகி வரணும்னு புரிஞ்சது. நான் இருமுறை கேப்டனாக இருந்தும் பெரிதாக என்னால பண்ண முடியாததுக்கு காரணம் என்னுடைய தவறுதான்.
முடிவு எடுக்கிற சூழல் வரும்போது அந்த இடத்துல நான் அதிகமாக யோசிப்பேன். அதுதான் எனக்குப் பிரச்னை. நான் எவிக்ட்டாகி வந்ததுக்குப் பிறகு அன்ஷித்தாவுடைய அம்மாவும், அண்ணனும் கால் பண்ணினாங்க. அன்ஷித்தா என்னுடைய தங்கச்சி..வீட்டுக்குள்ள என்னை அண்ணன்னு கூப்பிடுவாங்க. அதே மாதிரி தர்ஷா குப்தா அம்மாவும் பேசினாங்க. அவங்க `நேர்மையாக விளையாடுனீங்க. உங்க காஸ்ட்யூம் பிடிச்சிருந்தது'னு சொன்னாங்க." என்றவரிடம், `` அதுக்கெல்லாம் ட்ரால் பதிவுகள் வந்ததை கவனித்தீர்களா'' என மறு கேள்வி கேட்டோம். உடனடியாக பதிலளித்த அவர், `பப்ளிசிட்டி கிடைச்சதுல விடுங்க...'' எனக் நகைச்சுவையாக பல விஷயங்களை நம்மிடையே பகிர்ந்துக் கொண்டார்.