''எல்லாம் ஒரு வாய் ரேஷன் அரிசிக்காகத்தான்...'' - நீலகிரி ஒற்றை யானை குறித்து சூழ...
மூன்று காலிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!
பாகிஸ்தான் நிதியுதவியுடன் இயங்கும் காலிஸ்தான் ஜிந்தாபாத் படையைச் சேர்ந்த மூன்று பேர் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவர்கள் மூவரும் குர்தாஸ்பூர் உள்ளிட்ட பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்கள் மீது கையெறி குண்டுகளை வீசிய சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று பஞ்சாப் காவல்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : குடியரசு நாள் அணிவகுப்புக்கு சுழற்சி முறையில்தான் அலங்கார ஊர்தி!
உத்தரப் பிரதேச மாநிலம் எல்லைப் பகுதியில் உள்ள புரான்பூர் காவல் நிலையப் பகுதியில் பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச காவல்துறையினர் இணைந்து காலிஸ்தான் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, காவலர்களை தாக்க முயன்ற மூன்று காலிஸ்தான் தீவிரவாதிகளை போலீஸார் என்கவுன்டர் செய்துள்ளனர், அவர்களை அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுட்டுக் கொல்லப்பட்டவர்களிடம் இருந்து 2 ஏகே ரைபிள் மற்றும் 2 கைத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விரேந்தர் சிங், ஜஸ்ப்ரீத் சிங் மற்றும் குருவீந்தர் சிங் ஆகியோர் கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.