செய்திகள் :

கடையின் மீது விழுந்த விமானம்! 9 பேர் பலி!

post image

பிரேசில் நாட்டில் சிறிய ரக விமானம் ஒன்று கடையின் மீது விழுந்ததில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

தெற்கு பிரேசிலின் செர்ரா கவுச்சா மலைகளில் அமைந்துள்ள சுற்றுலா நகரமான கிராமடோ அந்நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாகும். கிறிஸ்துமஸ் விடுமுறை காலங்களில் அங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்வார்கள்.

இந்நிலையில், நேற்று (டிச.22) காலை சிறிய ரக விமானம் ஒன்று அந்நாட்டின் ம்ற்றொரு சுற்றுலாத் தளமான கனேலாவிலிருந்து புறப்பட்டுள்ளது.

அந்த விமானம் நடுவானில் பறந்துக்கொண்டிருந்தப் போது கட்டுப்பாட்டை இழந்து ஒரு கட்டடத்தின் புகைப்போக்கியின் மீது மோதியுள்ளது, பின்னர் அங்கிருந்து நிலைத்தடுமாறி வேறொரு கட்டடத்தின் இரண்டாம் தளத்தின் மீது மோதியுள்ளது, அதன்பின்னர் இறுதியாக ஒரு மரச்சாமான்கள் விற்கும் கடையின் மீது விழுந்து நொறுங்கியுள்ளது.

இதில் 9 பேர் பலியான நிலையில், 15 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: சொந்த போா் விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்: விமானி காயம்

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவோரில் பெரும்பாலானோர் அங்கு ஏற்பட்ட நெருப்பின் புகையை சுவாசித்து மயக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது.

பைபர் செய்யினே 400 டர்போபாப் எனும் அந்த சிறிய ரக விமானத்தில் எத்தனைப் பேர் பயணம் செய்தார்கள் என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இருப்பினும், அதில் பயணம் செய்தவர்கள் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயிலில் சிலிண்டர் வெடிப்பு! 9 ஐயப்ப பக்தர்கள் படுகாயம்!

கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியிலுள்ள சிவன் கோயிலில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 9 ஐயப்ப பக்தர்கள் படுகாயமடைந்துள்ளனர்.ஹூப்பள்ளியின் சாய் நகர் பகுதியிலுள்ள சிவன் கோயிலின் அறையில் நேற்று இரவு ஐயப்ப... மேலும் பார்க்க

நச்சுத் தன்மையுள்ள கடல்மீன் கடித்த மீனவருக்கு சிகிச்சை!

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்துக்கு அப்பால் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, நச்சுத் தன்மையுடைய மீன் கடித்த மீனவர் ஒருவர் மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.நாகை மாவட்டம... மேலும் பார்க்க

சிறிய ரக விமானம் விபத்து! 7 பேர் பலி!

மெக்ஸிகோவின் காட்டுப் பகுதியில் விழுந்து சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகினர்.அந்நாட்டின் மைக்கோகன் மாநிலத்தின் லா பரோடாவிலிருந்து நேற்று (டிச.22) புறப்பட்ட செஸ்னா 207 எனும் ச... மேலும் பார்க்க

மருத்துவ ஆலையில் வாயு கசிவு: 2 பேர் கவலைக்கிடம்!

ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஜவஹர்லால் நேரு ஃபார்மா சிட்டியில் ஏற்பட்ட வாயு கசிவினால் பாதிக்கப்பட்ட 2 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளனர். பாராவாட மண்டல் பகுதியிலுள்ள ஜவஹர... மேலும் பார்க்க

குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம்!

குஜராத் மாநிலம் கச்சு மாவட்டத்தில் இன்று காலை 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுள்ளது. குஜராத்தின் காந்தி நகரைச் சார்ந்த நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தகவலின் அடிப்பட... மேலும் பார்க்க

கடந்த 3 ஆண்டுகளாக உணவு உற்பத்தியில் சாதனை: முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு கடந்த 3 ஆண்டுகளாக உணவு உற்பத்தியில் சாதனை படைத்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், "உலகோர்க்கு உணவளிக்கும் உழவர்கள் அனைவ... மேலும் பார்க்க