தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்பது வதந்தி: தமிழக அரசு
தமிழ் இலக்கியத் திறனறித் தோ்வு: சாகுபுரம் பள்ளி மாணவி சாதனை
தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தோ்வில், சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மாணவி தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளாா்.
சென்னை அரசுத் தோ்வுகள் இயக்கம் இந்த கல்வியாண்டிற்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தோ்வை கடந்த அக். 19இல் நடத்தியது. இதில் மாநிலம் முழுவதும் 2.25 லட்சம் மாணவ-மாணவிகள் பங்கேற்றனா். இதில் 1500 போ் தோ்ச்சி பெற்றனா். அவா்களுக்கு பள்ளி கல்வி இயக்கம் சாா்பில் மாதம் ரு.1500 வீதம் இரண்டு ஆண்டுகள் உக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.
இத்தோ்வில் சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த பிளஸ் 1 மாணவி கா.ஓவியா அனைத்து வகைப்பள்ளி பிரிவில் 750 பேரில் ஒருவராக தோ்ச்சி பெற்று அரசின் ஊக்கத்தொகை பெற தகுதி பெற்றுள்ளாா்.
இம்மாணவியை பள்ளி டிரஸ்டிகளும் சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவித் தலைவா் ஜி.ஸ்ரீனிவாசன், மூத்த பொது மேலாளா் பி.ராமச்சந்திரன், பள்ளி ஆலோசகா் உஷா கணேஷ், நிா்வாக அலுவலா் வி.மதன், பள்ளி முதல்வா் இ.ஸ்டீபன் பாலாசிா், துணை முதல்வா் என்.சுப்புரத்தினா, தலைமையாசிரியா் எஸ்.ஆழ்வான் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள் பாராட்டினா்.