செய்திகள் :

அரசியல் சாசனத்தின் மீது உறுதியேற்று திருமணம் செய்துகொண்ட ஜோடி! - வைரல் திருமணமும், பின்னணியும்!

post image

சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜாஷ்பூர் மாவட்டத்தில் இருக்கிறது கபு கிராமம். இந்தக் கிராமத்தில் கடந்த 18-ம் தேதி நடந்த திருமணம் தற்போது கவனம் ஈர்த்திருக்கிறது. மணமகள் பிரதிமா லஹ்ரேவுக்கும் மணமகன் எமன் லஹ்ரேவுக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டது. பட்டதாரிகளான இருவரும் முற்போக்கு சிந்தனையுடையவர்கள் எனக் கூறப்படுகிறது. அதனால், இருவரும் இணைந்து தங்களின் திருமணம் எப்படி நடக்கவேண்டும் என ஆலோசித்து ஒருமுடிவுக்கு வந்திருக்கின்றனர். அதன்படி, வழக்கமான ஹோம குண்ட மந்திரங்கள், தாலி, குங்கும், அவர்களின் சமூக சடங்குகளான சத் பெராஸ், பேண்ட் பாஜா போன்ற சடங்குகளை தவிர்த்து, இந்திய அரசியல் சாசனத்தின் முன்பு இருவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டு, மிக சாதாரணமாக, எளிமையாக திருமணம் செய்திருக்கின்றனர்.

திருமணம்

இப்படி திருமணம் செய்துக்கொண்டதற்குப் பிறகு சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த தம்பதிகள், ``எங்கள் திருமணத் தேதி முடிவு செய்வதற்குமுன்பே சடங்குகளைத் தவித்துதான் திருமணம் செய்ய வேண்டும் என இருவரும் முடிவு செய்தோம். அதை எங்கள் வீட்டாரிடமும் பேசி புரியவைத்தோம். அதன்பிறகே திருமண ஏற்பாடுகள் நடந்தது. சடங்குகளைத் தவிர்க்க முக்கியக் காரணம் செலவுகளைக் குறைப்பதுதான். அண்ணல் அம்பேத்கரின் புகைப்படத்துக்கு முன்பு, அவர் இயற்றிய அரசியல் சாசனத்தின் மீது 'இருவரும் வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் ஆதரவளித்து, அவரவரின் தனிப்பட்ட உரிமைகளை காப்போம்' என உறுதிமொழி ஏற்றுக்கொண்டோம்.

இந்தத் திருமண முறைப்படி தேவையற்ற செலவுகளைக் குறைத்தோம். இந்த நிகழ்வு எங்கள் சமூக மக்களிடம் கவனம் பெற்றிருக்கிறது. பலரும் பாராட்டினார்கள். எங்கள் பெற்றோருக்கும் இந்த முடிவுக்கு மிகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கின்றனர்." என்றார்கள். இது சமூக வலைதளங்களில் பேசுபொருளானபோது, கலவையான விமர்சனங்கள் வந்தன. சிலர், ``திருமணத்தின் உண்மையான, அர்த்தமுள்ள அணுகுமுறை இது... பலரும் இந்த நிகழ்விலிருந்து உத்வேகம் பெறுவார்கள்" என்றனர்.

Amazon நிறுவனருக்கு 2-வது திருமணம்; ரூ,5096 கோடியில் தடபுடல் ஏற்பாடுகள்... மணமகள் யார் தெரியுமா?

உலகப் பணக்காரர்களில் ஒருவரான அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (60) கடந்த 2018-ம் ஆண்டு தனது முதல் மனைவி மெக்கன்சி ஸ்காட் என்பவரை விவாகரத்து செய்தார். இதற்காக, அவர் கணிசமான பங்குகளை தனது முன்னாள் மனைவிக்க... மேலும் பார்க்க

Dinga Dinga: உடலை ஆட வைக்கும் 'டிங்கா டிங்கா' காய்ச்சல்... 1518-ல் வந்த நோய் மீண்டும் வருகிறதா?

உகாண்டா நாட்டிலுள்ள புண்டிபுக்யோ மாவட்டத்தில் 'டிங்கா டிங்கா' என்று அழைக்கப்படும் விசித்திரமான புதிய நோய் பரவி வருகிறது. 'டிங்கா டிங்கா' என்னும் வார்த்தை நடனம் போல நடுங்குவதைக் குறிக்கிறது. தற்போது இந... மேலும் பார்க்க

அம்பானி பள்ளி விழாவில் கலந்துகொண்ட பாலிவுட் பிரபலங்கள்... அபிஷேக் - ஐஸ்வர்யா இணைந்து பங்கேற்பு!

அம்பானி இண்டர்நேஷனல் பள்ளி ஆண்டு விழாபாலிவுட் பிரபலங்களின் வாரிசுகள் அனைவரும் மும்பையில் உள்ள முகேஷ் அம்பானிக்கு சொந்தமான அம்பானி இண்டர்நேஷனல் பள்ளியில் படிக்கின்றனர். மும்பையில் உள்ள பாந்த்ராவில் இரு... மேலும் பார்க்க

YouTube: ``8 லட்சம் முதலீடு; 250 வீடியோ..'' -யூடியூப்பில் தோல்வியைச் சந்தித்த பெண் சொல்வதென்ன?

பலருக்கும் இன்று சோசியல் மீடியா வருமானம் ஈட்டும் ஒரு தளமாக அமைந்திருக்கிறது.அதிலும் குறிப்பாக பெரும்பாலானோர் யூடியூப் சேனலைத் தொடங்கி சம்பாதித்து வருகின்றனர். அந்தவகையில் நளினி உன்னாகர் என்ற பெண்ணும் ... மேலும் பார்க்க

1 மணி நேரம் முதியவரை நிற்க வைத்த அரசு ஊழியர்களுக்கு... அதிரடி பாடம் எடுத்த அதிகாரி..! என்ன நடந்தது?

வங்கிகள், ரயில் நிலையங்களில் முதியவர்கள் வரிசையில் நின்றால் அவர்களுக்கு இளையவர்கள் முன் வரிசையில் செல்லும்படி இடம் கொடுப்பது வழக்கம். ஆனால், டெல்லி அருகில் இருக்கும் நொய்டா குடியிருப்பு வீட்டு வசதித்த... மேலும் பார்க்க

நாமக்கல்: `பணம் பெருகும்' -யூடியூபில் ஜோதிடர் கூறியதை கேட்டு கோயிலில் குவிந்த மக்கள்..!

நாமக்கல், கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. மார்கழி மாத முதல் நாளையொட்டி நேற்று அதிகாலை சுவாமியை தரிசிக்க உள்ளூர் பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். அப்போது கோயில் வளாகத்தில் வ... மேலும் பார்க்க