வங்கதேச முன்னாள் பிரதமரை நாடு கடத்த மத்திய அரசிடம் வங்கதேசம் வலியுறுத்தல்!
மதுபோதையில் லாரி ஓட்டியதில் விபரீதம்! 3 பேர் பலி!
மகாராஷ்டிர மாநிலம் புணேவில் ஓட்டுநரால் மதுபோதையில் ஒட்டப்பட்ட லாரி நடைபாதையின் மீது ஏறியதில் அதில் படுத்துறங்கிய 3 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும், 6 பேர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர்.
புணே மாவட்டம் வக்கோலியிலுள்ள கேசந்து பத்தா எனும் இடத்தில் இன்று (டிச.23) அதிகாலை சாலையோரமாக உள்ள ஒரு நடைபாதையின் மீது 12 பேர் உறங்கிக்கொண்டிருந்தனர்.
அதிகாலை சுமார் 1 மணியளவில் கஜானன் ஷங்கர் டோட்ரே (26) என்பவர் குடிபோதையில் டிப்பர் லாரியை வேகமாக ஒட்டி வந்துள்ளார், இதில் நிலைத் தடுமாறி அந்த லாரி நடைபாதையின் மீது ஏறியது.
அப்போது அதில் உறங்கிக்கொண்டிருந்த 9 பேரின் உடல்கள் நசுங்கியதில், வைபவி ரித்தேஷ் பவார் (வயது-1), வைபவ் ரித்தேஷ் பவார் (2) ஆகிய இரண்டு குழந்தைகளும் விஷால் வினோத் பவார் (22) இளைஞரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதையும் படிக்க: ஹரியாணா உணவகத்தில் மூவர் சுட்டுக் கொலை!
உடனடியாக அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த 6 பேரை மீட்டு ஸஸ்ஸூன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், படுகாயமடைந்தவர்களில் 3 பேர் உயிருக்கு போராடி வரும் நிலையில், நடைபாதையில் உறங்கிய மேலும் 3 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாநில காவல்துரையினர் மதுபோதையில் லாரியை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரின் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.