சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம்: முதல்வர் ஸ்டாலின...
அம்பானி பள்ளி விழாவில் கலந்துகொண்ட பாலிவுட் பிரபலங்கள்... அபிஷேக் - ஐஸ்வர்யா இணைந்து பங்கேற்பு!
அம்பானி இண்டர்நேஷனல் பள்ளி ஆண்டு விழா
பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகள் அனைவரும் மும்பையில் உள்ள முகேஷ் அம்பானிக்கு சொந்தமான அம்பானி இண்டர்நேஷனல் பள்ளியில் படிக்கின்றனர். மும்பையில் உள்ள பாந்த்ராவில் இருக்கும் இப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் பாலிவுட் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
சமீப காலமாக விவாகரத்து சர்ச்சையில் சிக்கி வரும் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் தம்பதி பொது நிகழ்ச்சிகளில் சேர்ந்து கலந்து கொள்வதை தவிர்த்து வந்தனர். அதோடு, அமிதாப்பச்சன் வீட்டு குடும்ப நிகழ்ச்சியில் கூட ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளாமல் இருந்தார். ஆனால் தனது மகளின் பள்ளி ஆண்டு விழாவில் இரண்டு பேரும் சேர்ந்து கலந்து கொண்டனர். அவர்களுடன் அமிதாப்பச்சனும் கலந்து கொண்டார்.
ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன்:
அபிஷேக் பச்சன் மற்றும் அமிதாப்பச்சன் ஆகியோர் ஒரே காரில் விழாவிற்கு வந்தனர். அவர்களை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் தனிக்காரில் வந்தார். பின்னர் மூன்று பேரும் சேர்ந்து கொண்டனர். கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் அமிதாப்பச்சனுடன் பேசிக்கொண்டே விழா நடக்கும் இடத்திற்கு ஐஸ்வர்யா ராய் சென்றார்.
ஐஸ்வர்யா ராயிக்கு பாதுகாப்பு அரணாக அபிஷேக் பச்சன் சென்றார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அதனை பார்த்த நெட்டிசன்கள் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மூன்று பேரையும் ஒன்றாக பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோவை பார்க்கும்போது அபிஷேக் பச்சன் எந்த அளவுக்கு ஐஸ்வர்யா ராயை விரும்புகிறார் என்று தெரிகிறது என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா ராய், அவரது தாயார் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் ஒன்றாக கலந்து கொண்டனர்.
ஷாருக், சைஃப் அலி கான் பங்கேற்பு
அம்பானி பள்ளியில், நடிகர் ஷாருக்கானின் மகன் அப்ராம் படிக்கிறார். எனவே பள்ளி ஆண்டு விழாவில், ஷாருக்கான், அவரது மனைவி கெளரி, மகள் சுஹானா கான் ஆகியோரும் கலந்து கொண்டனர். இது தவிர நடிகை கரீனா கபூர் தனது கணவர் சைஃப் அலிகானுடன் தங்களது மகனின் ஆண்டு விழாவில் பங்கேற்றனர். இதே போன்று நடிகர் சாஹித் கபூர் தனது மனைவி மீராவுடன் விழாவில் கலந்து கொண்டார்.
இது தவிர தயாரிப்பாளர் கரண் ஜோகர், நடிகை ஜெனிலியா தேஷ்முக் போன்றோரும் அம்பானி பள்ளி ஆண்டு விழாவில் தங்களது குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கி கலந்து கொண்டனர். இதனால் விழாவில் பாலிவுட் பிரபலங்கள் நிறைந்து காணப்பட்டது.