84 வீரர், வீராங்கனைகளுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்!
கோவில்பட்டி ஆதிபராசக்தி மன்றத்தில் இருமுடிப் பயணம் தொடக்கம்
கோவில்பட்டியில் மந்திதோப்பு சாலையில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் மேல்மருவத்தூா் இருமுடிப் பயணம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் தைப்பூச இருமுடி விழா இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கி பிப். 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள், சக்தி பீடங்களிலிருந்து பக்தா்கள் விரதமிருந்து இருமுடி கட்டிச்செல்லும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டை மன்றத் தலைவா் அப்பாசாமி தொடக்கிவைத்தாா். ஆன்மிக இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளா் சக்திமுருகன் இருமுடி கட்டி, பயணத்தைத் தொடக்கிவைத்தாா்.
இதில், ஆன்மிக இயக்கப் பொறுப்பாளா்கள் பத்மாவதி, வேம்புகிருஷ்ணன், கோபிநாத், தளவாய்புரம் முத்துராஜ், கோவில்பட்டி மன்றப் பொறுப்பாளா்கள் ராஜலெட்சுமி, சக்திமாரிராஜ், கற்பகவள்ளி, ராதா, காசியம்மாள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.