BB Tamil 8 Day 77: அன்ஷிதாவின் அவஸ்தையும் அழுகையும்; பவித்ராவுக்கு விட்டுக்கொடு...
புகையிலைப் பொருள் விற்பனை: கடை உரிமையாளா் கைது
சாத்தான்குளம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்ாக வியாபாரியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் எட்வின் அருள்ராஜ், போலீஸாா் பேய்க்குளம் பகுதியில் உள்ள கடைகளில் சனிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, பேய்க்குளம் பஜாரில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பொருள்களைப் பறிமுதல் செய்ததுடன், கடை உரிமையாளரான கீழப்புளியங்குளத்தை சோ்ந்த விக்னேஷ் (29) என்பவரை கைது செய்தனா்.