செய்திகள் :

"என் செல்ல தங்கை, அன்பு மாப்பிள்ளைக்கு..." - கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்து தெரிவித்த சூரி

post image
கீர்த்தி சுரேஷூக்கும் அவருடைய நீண்ட நாள் காதலன் ஆண்டனி தட்டிலுக்கும் டிசம்பர் 12 ஆம் தேதி கோவாவில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு சென்ற பிரபலங்கள் தற்போது புகைப்படங்களைப் பகிர்ந்து தற்போது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூரி , " என் செல்ல தங்கை மற்றும் அன்பு மாப்பிள்ளை, உங்கள் மணவாழ்வு என்றும் மகிழ்ச்சியும் நேசமும் நிரம்பி, அழகான நினைவுகளால் நிறைந்ததாய் தொடரட்டும். ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து வாழ வாழ்த்துக்கள்!" என்று கீர்த்தி சுரேஷூக்கு தனது வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல மாரி செல்வராஜூம், " நீங்கள் நீண்ட நாளாக இந்தத் தருணத்திற்கு காத்துக்கொண்டிருந்தீர்கள் என்று எனக்கு தெரியும். அந்த மகிழ்ச்சியான தருணம் இப்போது நிறைவேறிவிட்டது. உங்களின் அன்பு எல்லா சந்தோஷங்களிலும், கொண்டாட்டங்களாலும் நிறைந்திருக்கட்டும்" என்று வாழ்த்தி இருக்கிறார்.

வருண் தவானுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் 'பேபி ஜான்' படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதனால் திருமணம் முடிந்த கையோடு இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் கீர்த்தி சுரேஷ் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Viduthalai 2: `அந்த வசனத்தை யாரையும் மனதில் வைத்து வெற்றிமாறன் சொல்லவில்லை’ - தொல்.திருமாவளவன்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில், இளையராஜா இசையில் உருவாகியுள்ள 'விடுதலை- 2' கடந்த 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற... மேலும் பார்க்க

Vidaamuyarchi : `அஜித் சார் நீங்கள் நீங்களாகவே இருந்தீர்கள்; அத்தனை அன்புக்கும்...' - மகிழ் திருமேனி

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் `குட் பேட் அக்லி' திரைப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், அவரின் மற்றொரு படமான விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டதாக அறிவிப்பு வெளியாகியிருக்... மேலும் பார்க்க

``சார்பட்டா பரம்பரை-2 அப்டேட் முதல் விளையாட்டு வீரர்களின் பரிசுத்தொகை வரி வரை" - நடிகர் ஆர்யா பேட்டி

சென்னை அண்ணா நகரில் ஒரு ஹோட்டல் திறப்பு விழாவில் கலந்துக்கொண்ட நடிகர் ஆர்யா செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது, ``பாலா 25-ம் ஆண்டு கொண்டாட்டத்தின்போது வெளியே படப்பிடிப்பில் இருந்ததால் கலந்துக்கொள்ளம... மேலும் பார்க்க

Viduthalai 2: `நீங்க படத்துல பாக்குறது வெறும் 20 சதவிகித காட்சிகள்தான்'- `விடுதலை' பால ஹாசன் பேட்டி

அதிகார வர்கத்திற்கு எதிரான அரசியலை அழுத்தமாகப் பேசும் திரைப்படமாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியிருக்கிறது `விடுதலை பாகம் 2'.இத்திரைப்படத்தில் பெருமாள் வாத்தியாரின் உண்மை நிலையை கான்ஸ்டபிள்... மேலும் பார்க்க