''எல்லாம் ஒரு வாய் ரேஷன் அரிசிக்காகத்தான்...'' - நீலகிரி ஒற்றை யானை குறித்து சூழ...
ஹரியாணா உணவகத்தில் மூவர் சுட்டுக் கொலை!
ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலவில் உள்ள உணவகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பெண் உள்பட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றுள்ளது. பலியானவர்கள் தில்லியைச் சேர்ந்த விக்கி மற்றும் விபின் என்றும், ஹிசாரைச் சேர்ந்த நியா என்றும் அடையாளம் காணப்பட்டதாகப் பிஞ்சோர் போலீஸார் தெரிவித்தனர்.
உணவகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் அடையாளம் தெரியாதவர்களால் மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். சம்பவம் நடந்தபோது மூவரும் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள வந்திருந்தனர் என்று பஞ்ச்குலா காவல் உதவி ஆணையர் அரவிந்த் காம்போஜ் தெரிவித்தார்.
30 வயதுடைய விக்கி, குற்றப் பின்னணி கொண்டவர் மற்றும் சில வழக்குகளை எதிர்கொண்டார். மேலும் சிசிடிவி காட்சிகளையும், மற்ற தடயங்களைச் சேகரித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.
கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.