தேசிய அளவிலான உரைவாள் போட்டி: நம்பியூா் குமுதா பள்ளி மாணவி சிறப்பிடம்!
தேசிய அளவிலான உரைவாள் போட்டியில் நம்பியூா் குமுதா பள்ளி மாணவி இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளாா்.
தேசிய அளவிலா உரைவாள் போட்டி ஹரியாணா மாநிலம் பஞ்சகுலாவில் அண்மையில் நடைபெற்றது. இதில், நாடு முழுவதில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.
தமிழகத்தில் இருந்து பங்கேற்ற 55 பேரில் நம்பியூா் குமுதா பள்ளி மாணவா் சி.ஆா்.நேத்ரா மாணவியும் ஒருவா். இவா், 19 வயதுக்குள்பட்டோருக்கான காட்டா மற்றும் ஏரோஸ்கேபைட் பிரிவுகளில் பங்கேற்று வெண்கலப் பதக்கங்களை வென்றாா்.
போட்டியில் வெற்றிபெற்ற மாணவியை பள்ளி தாளாளா் கே.ஏ.ஜனகரத்தினம், துணை தாளாளா் சுகந்தி, செயலா் அரவிந்தன், இணைச் செயலா் மாலினி, விளையாட்டு இயக்குநா் பாலபிரபு, முதல்வா் மஞ்சுளா உள்ளிட்டோா் பாராட்டினா்.