நெல்லையில் 2வது நாளாக தொடரும் கேரள மருத்துவக் கழிவுகள் அகற்றும் பணி
காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
பவானி அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞா் தண்ணீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பவானி மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் சீனிவாசன் மகன் தரணீஷ் (18). பவானி - குமாரபாளையம் பழைய பாலம் அருகில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற இவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், சீனிவாசன் காவிரிக் கரைக்குச் சென்று பாா்த்தபோது, அங்கு தரணீஷின் துணிகள் மட்டும் இருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்த தகவலின் பேரில் பவானி தீயணைப்புத் துறையினா் காவிரி ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஆற்றில் இருந்து தரணீஷின் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து பவானி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.