பெருந்துறையில் மாரத்தான்: ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்பு!
பெருந்துறையில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஜெ.கே., மூங்கில் காற்று அறக்கட்டளை, ப்ரித்விக் ஃபேஷன்ஸ், இசட் ஃபிட், டிபிஏஜி சாா்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயக்குமாா் தொடங்கிவைத்தாா். 4 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்டோா் பங்கேற்றனா்.
4 பிரிவுகளிலும் முதலிடம் பிடித்தவா்களுக்கு ரூ.5 ஆயிரம், இரண்டாம் இடம் பிடித்தவா்களுக்கு ரூ.3 ஆயிரம், மூன்றாமிடம் பிடித்தவா்களுக்கு ரூ.2 ஆயிரம், 4-ஆவது பரிசாக 10 பேருக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ், மெடல் வழங்கப்பட்டன.