விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் கூட்டம்: முதல்வருக்கு அழைப்பு
நவபாஷாண முருகர் சிலை, யானை தந்தத்தால் செய்த கிருஷ்ணர் சிலை பறிமுதல் - ஷாக் கொடுக்கும் சந்தை மதிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிலைக் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், மத்திய வனவிலங்கு குற்றத் தடுப்புப் பிரிவினர் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.
திருவண்ணாமலை அருகிலுள்ள கண்டியாங்குப்பம் கிராமத்திலுள்ள மரப்பட்டறையில் டிசம்பர் 22-ம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் முருகர் மற்றும் கிருஷ்ணர் ஆகிய 2 சுவாமி சிலைகள் சிக்கின. இது தொடர்பாக, 2 பேரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் இருவரும் ராஜசேகர், வெங்கடேசன் எனத் தெரியவந்தது. இதில் 2 அடி உயரம், 10 கிலோ எடை கொண்ட முருகர் சிலையானது நவபாஷாணத்தில் செய்யப்பட்டது என்றும், இதன் சந்தை மதிப்பு ரூ.25 கோடி எனவும் கூறப்படுகிறது. இதேபோல், கிருஷ்ணர் சிலையானது யானை தந்தத்தால் செய்யப்பட்டிருக்கிறது. இதன் சந்தை மதிப்பு ரூ.30 லட்சம் என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து, சாமி சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட ராஜசேகர், வெங்கடேசன் ஆகிய 2 பேரும் திருவண்ணாமலை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாகக் கூறப்படும் முருகர் சிலையை ஆய்வுக்கு உட்படுத்தத் திட்டமிட்டிருக்கின்றனர். ஆய்வுக்குப் பிறகே உண்மைத் தன்மை தெரியவரும் எனவும் வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த கடத்தல் நெட்வொர்க் பின்னணியில் இருப்பவர்கள் பெங்களூரு போன்ற பகுதிகளில் பதுங்கியிருப்பதாகவும் தெரியவந்திருப்பதையடுத்து, அவர்களை பிடிக்கும் பணியும் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.