Elon Musk: ``எலான் மஸ்க் அமெரிக்காவின் அதிபராக முடியாது; ஏனெனில்?" - ட்ரம்பின் `...
மெரீனாவில் அம்பேத்கருக்கு சிலை: செ.கு.தமிழரசன்
சென்னை மெரீனா கடற்கரையில் அம்பேத்கருக்கு சிலை வைக்க வேண்டும் என்று இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு.தமிழரசன் தெரிவித்தாா்.
சேலத்தில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
அமித் ஷாவின் பேச்சு, அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். அம்பேத்கா் குறித்த கருத்துக்காக அவா் மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையெனில் பதவி விலக வேண்டும்.
அரசு சாா்பில் சென்னை மெரீனா கடற்கரையில் அம்பேத்கருக்கு சிலை வைப்பதாக கூறிவிட்டு மற்ற அனைவருக்கும் சிலை வைத்துள்ளனா். அவருக்கும் சிலை வைக்க வேண்டும். அம்பேத்கரை புகழ்ந்து அரசியல் மட்டுமே செய்கின்றனா்.
ஊராட்சி தலைவா் முதல் மேயா் வரை துணைத் தலைவா் பதவிகளில் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்ற வேண்டும். சமூகநீதி கொள்கைக்கு எதிரான ஆட்சிதான் நடைபெறுகிறது. அனைத்து தோ்தல்களிலும் இட ஒதுக்கீடு முறையை நடைமுறைபடுத்த வேண்டும். மத்திய அரசு கொண்டுவரும் ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம் சாத்தியமில்லை என்றாா். பேட்டியின்போது, மாவட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.