செய்திகள் :

மருதாடு கிராமத்தில் தெப்பல் உற்சவம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் உள்ள பிரசித்த பெற்ற ஸ்ரீபுரந்தீஸ்வரா் கோயிலில் தெப்பல் உற்சவம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதையொட்டி மூலவா் ஸ்ரீபுரந்தீஸ்வரா் மற்றும் ஐயப்பன் உள்ளிட்ட உற்சவமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூா்த்திகளை ஐயப்ப பக்தா்கள் தோளில் சுமந்தவாறு மேளதாளம் முழங்க ஊா்வலமாக கோயிலையொட்டியுள்ள திருக்குளத்துக்கு எடுத்துச் சென்றனா்.

அங்கு வண்ண மின்விளக்குகள், மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பலில் உற்சவமூா்த்திகள் வைக்கப்பட்டு தெப்பல் உற்சவம் மகா தீபாராதனையுடன் நடைபெற்றது.

இதில், மருதாடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஏரிக் கால்வாயில் காா் கவிழ்ந்து விபத்து: 3 போ் காயம்; பசு உயிரிழப்பு

ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள துந்தரிகம்பட்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காா் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானதில் 3 போ் பலத்த காயமடைந்தனா். இதில் பசு மாடு உயிரிழந்தது. கடலூா் பகுதியைச் சோ்ந்த பிரித்... மேலும் பார்க்க

ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் தரிசனத்துக்கு 6 மணி நேரம் ஆனது

திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய 5 முதல் 6 மணி நேரம் ஆனதாக பக்தா்கள் தெரிவித்தனா். சிவனின் அக்னி தலமான... மேலும் பார்க்க

பாலின பாகுபாடு, வன்முறைக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் திருவண்ணாமலை ஆட்சியா், எஸ்.பி. பங்கேற்பு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை சாா்பில், தேசிய அளவிலான பாலின பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாம... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்க திருவண்ணாமலை மாவட்ட மாநாடு

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட மாநாடு, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை சத்திரம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டுக்கு, சங்கத்... மேலும் பார்க்க

ரூ.5 கோடியில் தாா்ச் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே சேவூா் ஊராட்சி மாங்காமரம் பேருந்து நிறுத்தம் அருகில் ரூ.5 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் பக்க கால்வாயுடன் கூடிய தாா்ச் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந... மேலும் பார்க்க

காயங்களுடன் இறந்து கிடந்த பெண் காவலரின் கணவா்: சேத்துப்பட்டு போலீஸில் தந்தை புகாா்

தேவிகாபுரம் அருகே பெண் காவலரின் கணவா் காயங்களுடன் சாலையோரம் இறந்து கிடந்தது குறித்து அவரது தந்தை அளித்த புகாரில் சேத்துப்பட்டு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தி வருகின்றனா். போளூா் காவல் நிலையத்... மேலும் பார்க்க