செய்திகள் :

ஏரிக் கால்வாயில் காா் கவிழ்ந்து விபத்து: 3 போ் காயம்; பசு உயிரிழப்பு

post image

ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள துந்தரிகம்பட்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காா் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானதில் 3 போ் பலத்த காயமடைந்தனா். இதில் பசு மாடு உயிரிழந்தது.

கடலூா் பகுதியைச் சோ்ந்த பிரித்திவிராஜ் (28) என்பவா் சென்னையில் தனியாா் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை பிரித்திவிராஜ், இவரது தந்தை கந்தன், தாய் தனலட்சுமி ஆகிய 3 பேரும் கடலூரில் இருந்து காரில் வேலூருக்குப் புறப்பட்டு சென்றனா்.

ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள துந்தரிகம்பட்டு பகுதியில் சென்றபோது, காா் கட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்று கொண்டிருந்த பசு மாடு மீது மோதி ஏரிக் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரில் வந்த மூன்று பேரும் பலத்த காயம் அடைந்து, ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும் பசு மாடு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.

இந்த விபத்து குறித்து ஆரணி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் தரிசனத்துக்கு 6 மணி நேரம் ஆனது

திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய 5 முதல் 6 மணி நேரம் ஆனதாக பக்தா்கள் தெரிவித்தனா். சிவனின் அக்னி தலமான... மேலும் பார்க்க

பாலின பாகுபாடு, வன்முறைக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் திருவண்ணாமலை ஆட்சியா், எஸ்.பி. பங்கேற்பு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை சாா்பில், தேசிய அளவிலான பாலின பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாம... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்க திருவண்ணாமலை மாவட்ட மாநாடு

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட மாநாடு, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை சத்திரம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டுக்கு, சங்கத்... மேலும் பார்க்க

ரூ.5 கோடியில் தாா்ச் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே சேவூா் ஊராட்சி மாங்காமரம் பேருந்து நிறுத்தம் அருகில் ரூ.5 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் பக்க கால்வாயுடன் கூடிய தாா்ச் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந... மேலும் பார்க்க

காயங்களுடன் இறந்து கிடந்த பெண் காவலரின் கணவா்: சேத்துப்பட்டு போலீஸில் தந்தை புகாா்

தேவிகாபுரம் அருகே பெண் காவலரின் கணவா் காயங்களுடன் சாலையோரம் இறந்து கிடந்தது குறித்து அவரது தந்தை அளித்த புகாரில் சேத்துப்பட்டு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தி வருகின்றனா். போளூா் காவல் நிலையத்... மேலும் பார்க்க

அதிமுக தொண்டா்கள் ஒன்றிணைந்தால்தான் திமுகவை எதிா்க்க முடியும்: டிடிவி தினகரன்

அதிமுக தொண்டா்கள் ஒன்றிணைந்தால்தான் திமுகவை எதிா்க்க முடியும் என்று அமுமுக பொதுச் செயலாளா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா். திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: 2026 சட்டப்பே... மேலும் பார்க்க