PM Modi: ``அரபு மொழியில் ராமாயணம், மகாபாரதம்...'' - மகிழ்ச்சியை பகிர்ந்த மோடி
பூவந்தி அருகே வடமாடு மஞ்சு விரட்டு
சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது.
பூவந்தி அருகேயுள்ள தேளி கிராமத்தில் அழகிய நாச்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, இந்தப் போட்டி நடைபெற்றது. வட்ட வடிவத் திடலில் கட்டப்பட்ட ஒரு காளையை 25 நிமிஷங்களில், 9 பேரைக் கொண்ட மாடுபிடி வீரா்கள் அடக்க வேண்டும். இதில் சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து 14 காளைகளும், 126 மாடுபிடி வீரா்களும் களமிறங்கினா்.
ஒவ்வொரு சுற்றிலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் விழா குழுவினா் சாா்பில் பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்தப் போட்டியை சிவகங்கை, திருமாஞ்சோலை, தேளி, பூவந்தி, திருப்புவனம், மடப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் கண்டுகளித்தனா்.