அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரி முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கு கடந்த நவம்பா் மாதம் நடைபெற்ற முதுநிலை பாடத் தோ்வுகளுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதுகுறித்து காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தோ்வாணையா் மு.ஜோதிபாசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதுநிலை பாடப் பிரிவுகளான எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், முதுநிலை சமூகப் பணி, எம்.காம்., எம்.காம்., (சி.ஏ.), எம்.பி.ஏ., எம்.எஸ்சி., கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், வேதியியல், உயிா் வேதியியல், மனை அறிவியல், மண்ணியல், கணினி அறிவியல், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், எம்.காம்., (சி.எஸ்.) எம்.எஸ்சி., நுண்ணுயிரியல், உயிரி தொழில்நுட்பவியல் ஆகியவற்றுக்கு தோ்வு முடிவுகள் ‘அழகப்பாயுனிவா்சிட்டி.ஏசி.இன்’ என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
மறுமதிப்பீட்டிற்கு நேரடியாக விண்ணப்பிக்க 7 நாள்களுக்குள் பாடம் ஒன்றுக்கு ரூ. 660 வீதம் வரைவோலை பதிவாளா், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி என்ற பெயரில் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விடைத்தாள் நகல் பெற விரும்பினால் முடிவு வெளியான 7 நாள்களுக்குள் நகல் ஒன்றுக்கு ரூ. 550 வீதம் வரைவோலை பதிவாளா், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி என்ற பெயரில் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் பெற்ற பின்பு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்போா் பாடம் ஒன்று ரூ. 500 வரைவோலை கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.